இந்த நிரந்தரமற்ற வாழ்க்கையில் அவசர தேவைகள் பல இருக்கும் வேலையில் திடீரென பணத் தேவை வரும் போது, அன்று முதல் இன்று வரையில் அனைவருக்கும் சிறந்த பணம் ஈட்டும் வழியாக இருப்பது நகைக் கடன் தான்.
தற்போது அனைத்து வங்கிகளிலும் நகைக் கடன் அளிக்கப்பட்டு வரும் நிலையில், நம்முடைய நகையைப் பாதுகாப்பாக வைப்பது மட்டும் அல்லாமல் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும்.

அதிலும் கொரோனா தொற்று-க்குப் பின் அனைத்து வங்கி, நிதி நிறுவனங்கள், NBFC அமைப்புகளில் நகைக் கடன் வழங்கப்படுகிறது.
மேலும் தற்போது அனைத்துத் தரப்பு மக்களுக்கு நகைக் கடன் சேவை கொண்டு சேர்க்கும் விதமாக 1,500 ரூபாய் முதல் தங்க நகைக்கான கடன் வங்கிகள் வழங்குகிறது. ஆனால் குறைந்தபட்ச கடன் அளவு என்பது ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும்.
ஐசிஐசிஐ வங்கியில் 10,000 ரூபாயில் இருந்தும், எஸ்பிஐ வங்கியில் 20,000 ரூபாயில் இருந்தும், முத்தூட் பைனான்ஸ் 1,500 ரூபாயில் இருந்து தங்க நகை கடன் அளிக்கிறது. மேலும் இது ஒவ்வொரு வங்கிகளுக்கும் மாறுபடும் என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்நிலையில் தற்போது எந்த வங்கியில் குறைவான வட்டியில் தங்க நகை கிடைக்கிறது என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
எஸ்பிஐ வங்கி - 7 முதல் 7.50 சதவீத வட்டி
பாங்க் ஆப் இந்தியா - 7.40 சதவீத வட்டி
கனரா வங்கி - 7.65 சதவீத வட்டி
யூகோ வங்கி - 8.50 சதவீத வட்டி
இந்தியன் வங்கி - 7 சதவீத வட்டி
கரூர் வைஸ்யா வங்கி - 10.10 சதவீத வட்டி
கோட்டாக் மஹிந்திரா வங்கி - 10 முதல் 17 சதவீத வட்டி
இன்டஸ்இந்த் வங்கி - 10.5 முதல் 16 சதவீத வட்டி
ஹெச்டிஎப்சி வங்கி - 8.95 முதல் 17.23 சதவீத வட்டி
ஐசிஐசிஐ வங்கி - 10 முதல் 19.76 சதவீத வட்டி
ஆக்சிஸ் வங்கி - 13 சதவீத வட்டி


Click it and Unblock the Notifications