அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் முடிந்த பின்பு முதலீட்டு சந்தையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. இந்த மாற்றம் அனைத்திற்கும் தலையாய காரணம் என்றால் அது டொனால்ட் டிரம்ப் பதிவு செய்த மகத்தான வெற்றி தான், அமெரிக்க ஆட்சியில் மட்டும் அல்லாமல் நாடாளுமன்றத்திலும் டிரம்ப் தலைமையிலான அரசின் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் இந்த ஆட்சியில் அறிவிக்கும் ஓவ்வொரு அறிவிப்பும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக உள்ளது.
ஏற்கனவே டொனால்டு டிரம்ப் கிரிப்டோகரன்சி-க்கு பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வரும் காரணத்தால், இவருடைய வெற்றி கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது. அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு பின்பு கிரிப்டோகரன்சியின் சந்தை மதிப்பு சுமார் 50%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், பிட்காயின் உட்பட பல கிரிப்டோகாயின்கள் விலை புதிய சாதனை உயர்வை எட்டியுள்ளது.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிட்காயின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 10600 டாலர் வரையில் உயர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது. சில வாரங்களுக்கு முன்பே 1 லட்சம் டாலரைத் தொட்ட நிலையில், இன்று 106000 டாலரைத் தொட்டது. பிட்காயின் 106,449 டாலர் தொட்ட பின்பு தற்போது 104,780 டாலராகக் குறைந்துள்ளது.
இன்றைய பிட்காயின் விலை உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணம் உள்ளது, டிரம்ப் நிர்வாகம் பைடன் அரசை காட்டிலும் கிரிப்டோகரன்சிகளுக்கு மிகவும் ஆதாரவாக இருக்கும் எண கருதப்படுவதால், பல வருடமாக தூங்கிக்கொண்டு இருந்த கிர்டோ முதலீட்டாளர்கள் அனைவரும் விழித்துக்கொண்டனர்.
இந்த முக்கியமான நேரத்தில் டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா எப்படி தனது எண்ணெய் தேவைக்காக பல இடத்தில் இருந்து திரட்டி எண்ணெய் இருப்பு சேமிக்கிறதோ, இதேபோன்று டிஜிட்டல் நாணயம் அதாவது கிரிப்டோகரன்சி தேசிய கையிருப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதுக்குறித்து மீண்டும் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இதனால் பல முதலீட்டாளர்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் பிட்காயின் 120,000 டாலர் வரையில் உயரும் என நம்புகின்றனர். இதை தொடர்ந்து 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிட்காயின் 150,000 டாலர் வரையிலும் உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், டிரம்ப் சிலிக்கான் வேலி தொழிலதிபர் டேவிட் சாக்ஸை தனது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கிரிப்டோகரன்சி tsar என்று பெயரிட்டார். சாக்ஸ் முன்னாள் பேபால் நிர்வாகி மற்றும் டிரம்ப் ஆலோசகரும் மெகா நன்கொடையாளருமான எலோன் மஸ்க்கின் நெருங்கிய நண்பர் ஆவார்.


Click it and Unblock the Notifications