சென்னை: 1984ஆம் ஆண்டில் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற நாளில் இருந்து 3ஆவது ஹசனல் போல்கியா இப்னி ஒமர் அலி சய்ஃபுதின் புருனையின் நீண்டகாலம் ஆட்சி செய்த அதிபர் ஆவார். அதேகாலகட்டத்தில் அவர் புருனையின் பிரதமாகவும் இருந்துள்ளார். 1967 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதியன்று போல்கியாவின் தந்தை பதவி துறந்ததில் இருந்து ராஜா இஸ்தெரி பென்கிரான் அனக் டாமிட்டின் மூத்த மகனான 3ஆவது ஒமர் அலி சய்ஃபுத்தின் புருனை சுல்தான் பதவிக்கு வந்தார். உலகின் சர்வாதிகாரி மன்னர்களில் ஒருவர்.
30 பில்லியன் டாலர் சொத்து மதிப்புள்ள சுல்தான் உலகின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். ஆட்சிப்பீடத்தில் அதிக காலம் நீட்டிக்கும் மன்னர் என்ற பெருமையை சுல்தான் பெற்றுள்ளார். 2017 ஆம் ஆண்டில் தனது ஆட்சி பீடத்தின் பொன்விழாவான 50ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடினார். இங்கிலாந்து நாட்டின் இரண்டாவது ராணி எலிசபெத்துக்குப் பின் சுல்தான் இந்தப் பெருமையைப் பெற்றார்.

1946 ஜூலை 15 ஆம் தேதி இஸ்தானா தாருசலாம் என்ற புருனை நகரில் ஹசனல் போல்கியா பிறந்தார். அவரது பெரியப்பா சுல்தான் அகமது தாஜ்ஜுதீன் காலத்தில் பிறந்தார். அவரது தந்தை பெண்டஹாராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் ஆட்சிப் பீடத்தை எட்டுவதற்கான பிரகாசமான வாய்ப்புடன் இருந்தார் போல்கியா.
இங்கிலாந்தின் சாண்ட்ஹர்ஸ்ட்டில் உள்ள ராயல் மிலிட்டரி அகாடமியில் பட்டப்படிப்பை 1967ஆம் ஆண்டு முடித்தார். கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா இன்ஸ்டிடியூஷனில் உயர்கல்வி படித்தார்.
ஆகஸ்ட் 1968 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றார். அப்போது ஐநா சபை, ஆசியான் போன்ற அமைப்புகளில் புருனையை உறுப்பினராக்குவதில் வெற்றி பெற்றார். இதுபோன்ற குறிப்பிடத்தக்க செயல்களைச் சொல்ல முடிந்தாலும் சுல்தான் அவரது சொகுசு வாழ்க்கை முறைக்கும் அவர் சேர்த்து வைத்துள்ள ஆடம்பரமான சொத்துக்களுக்கும்தான் அதிகம் பேசப்படுகிறார்.
சுல்தானின் பெருமளவு வருவாய் எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயுவில் இருந்து கிடைக்கிறது.
சுல்தானின் வீடான இஸ்தானா நூருல் இமான் அரண்மனை 1984 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு விடுதலையடைந்ததை நினைவுகூரும் வகையில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. 2 மில்லியன் சதுர அடி பரப்புள்ள இந்த அரண்மனை உலகிலேயே மிகப்பெரிய அரண்மனை என்று உலக சாதனைகளுக்கான கின்னஸ் புக்கில் இடம் பெற்றுள்ளது.
அரண்மனையின் கும்பம் 22 கேரட் தங்கத்தினால் ஆனது. இஸ்தானா நூருல் இமான் அரண்மனையின் மதிப்பு ரூ.2550 கோடியாகும்.
இங்கு 5 நீச்சல்குளங்கள், 257 குளியலறைகள் மற்றும் 1700 அறைகள் உள்ளன. குளிர்சாதன வசதியுடனான 200 குதிரை லாயங்கள் உள்ளன. அத்துடன் 110 கேரேஜ்களும் உள்ளன.
சுல்தான் தனது சொந்த உபயோகத்துக்காக ரூ.3000 கோடியில் போயிங் 747 விமானத்தை வாங்கி வைத்துள்ளார். அந்த விமானத்தில் 120 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தில் ஆன வாஷ்பேசினை சுல்தான் அமைத்துள்ளார்.
போல்கியா தனது மகளுக்குப் பிறந்தநாள் பரிசாக ஏர்பஸ் ஏ340 விமானத்தைப் பரிசளித்ததாகக் கூறப்படுகிறது.
உலகின் அரிய வகை கார்களை வாங்கி சுல்தான் குவித்துள்ளார். தங்க பிளேட்டிலான ரோல்ஸ்ராய்ஸ் உள்பட பல சொகுசுகார்களை வைத்துள்ளார்.
புருனையின் 29ஆவது சுல்தானான போல்கியா 7000 வாகனங்களை வைத்துள்ளார். இவற்றின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 300 பெராரிகள் 500 ரோல்ஸ் ராய் கார்கள் அவரது கார் கலெக்ஷனில் உள்ளன. சுல்தானின் ரோல்ஸ் ராய்ஸ் கார் அவருக்காகவே வடிவமைக்கப்பட்டது. அதன் மேற்கூரை திறந்திருக்கும். அதில் ஒரு குடை பொருத்தப்பட்டிருக்கும்.
போல்கியா அமைத்துள்ள தனியார் மிருகக்காட்சி சாலையில் 30 வங்காள புலிகள் உள்ளன. இதை பார்த்து ரசிப்பதற்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த மிருகக்காட்சி சாலையில் கக்கடூஸ், பிளம்மிங்கோஸ், பால்கன்ஸ் போன்ற பாட, பேச, சைக்கிள் ஓட்டக்கூடிய, பேஸ்கட் பால் விளையாடும் பறவைகள் உள்ளன.
வயதாக ஆனபோதிலும் போல்கியாவுக்கு ஆடம்பர மோகம் தணியவில்லை. தனது தலைமுடியை அலங்காரம் செய்வதற்காக 20,000 டாலர்களை செலவிடுகிறார். லண்டனில் உள்ள டோர்செஸ்டர் ஹோட்டலின் பார்பரை விமானத்தில் சென்று பார்த்து தலைமுடியை வெட்டிக் கொள்கிறார். அங்கு 3 அல்லது நான்கு வாரத்துக்கு ஒருமுறை சென்று வருகிறார்.
இந்தியாவுக்கு வருகையில் முதல் வகுப்பு விமான டிக்கெட்டுக்கு சுல்தான் 12,000 டாலர்கள் செலவிடுகிறார்.


Click it and Unblock the Notifications