தன்னம்பிக்கை மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மையை மட்டுமே உறுதுணையாக கொண்டு சமுதாயத்தை மாற்றியமைத்த பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர்தான் த்ருப்தி பூஷன் தாகேட். காளான் வளர்ப்பில் தனக்கு இருந்த ஆர்வத்தின் காரணமாக கல்லூரி வாழ்க்கையை பாதியிலேயே விட்டுவிட்டு காளான் வளர்ப்பில் ஈடுபடத் தொடங்கினார். இன்று நூற்றுக்கணக்கான பெண்களை ஊக்குவித்து அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி தானும் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
2016-ஆம் ஆண்டில் திருப்தியின் கணவர் பணியில் ட்ரான்ஸ்ஃபர் கிடைத்ததால் புனைவுக்கு மாற்றப்பட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த த்ருப்தி காளான் வளர்ப்பு, விவசாயம், உரங்கள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்ய தொடங்கினார். பிற விஷயங்களில் கவனம் செலுத்தினாலும் திருப்தி தாகெட்டுக்கு காளான் வளர்ப்பில் தான் அதிக ஆர்வம் இருந்தது. இதன் காரணமாக பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் கலந்துகொள்ள தொடங்கினார்.

திருப்திக்கு ஒரு பண்ணையைத் தொடங்கி ஒவ்வொரு வீட்டிற்கும் சத்தான காளான்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற கனவு இருந்தது. காளான் வளர்ப்பில் ஈடுபட்டு ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று முடிவு செய்த திருப்தி பிற விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை. புனேவின் புறநகர் பகுதியில் 2000 சதுர அடி நிலத்தை குத்தகைக்கு எடுத்தார்.
அதனுள் திருப்தி மஷ்ரூம் வளர்ப்பதற்கான அறை ஆகியவற்றை ரூ3.5 லட்சம் செலவில் உருவாக்கினார். ஆரம்பத்தில் திருப்தி காளான் வளர்ப்பதற்காக வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து விதைகளை வாங்கி 20 பெட்டுகளை அமைத்தார்.
மேலும் திருப்தி புனே புறநகர் பகுதியில் உள்ள காய்கறி சந்தைகளில் காலை மாலை நேரங்களில் தனது ஆயிஸ்டர் மஷ்ரூம்களை சுவைத்துப் பார்க்கச் சொல்லி அங்கு சென்று கொண்டிருப்பவர்களிடம் கொடுப்பார். அதன்பிறகு காளான்கள் குறித்து மார்க்கெட்டிங் செய்ய சமூக ஊடகங்களின் கணக்குகளையும் பயன்படுத்தத் தொடங்கினார்.
இதன் விளைவாக டெலிவரி ஆர்டர்கள் வரத் தொடங்கின. அப்படி உருவாக்கப்பட்டது தான் "குவாலிட்டி மஸ்ரூம்" என்ற பிராண்ட். 2018-ஆம் ஆண்டில் 3.5 லட்சம் ஆரம்ப முதலீட்டில் நிறுவப்பட்ட குவாலிட்டி மஸ்ரூம் பார்ம் ஆயிஸ்டர் மஸ்ரூம், பால் மஸ்ரூம் மற்றும் பிற மஸ்ரூம்களை விற்பனை செய்கிறது. 15 ஊழியர்களுடன் ஒரு ஆண்டுக்கு சுமார் 50 லட்ச ரூபாய் திருப்தி வருமானம் பெறுகிறார். இப்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான மஸ்ரூம் பண்ணைகளை அமைப்பதற்கும் உதவி வருகிறார். இந்த மஸ்ரூம் விவசாயி பல புகழ்பெற்ற நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் அவ்வப்போது பேச்சாளராக பங்கேற்று பிறரையும் ஊக்குவித்து வருகிறார்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications