சமீபத்தில் தங்கம் விலை படு பயங்கரமாக உயர்ந்தது. இதனால் ஏப்ரல் 25-ஆம் தேதியான இன்றைய தினம் தங்க ஒப்பந்தங்களை வாங்கிய முதலீட்டாளர்கள் இதற்கு மேலும் விலை உயராது என்று நினைத்து தாங்கள் வாங்கிய ஒப்பந்தங்களை விற்று லாபம் பார்க்கத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் விலை குறைந்தது. அதோடு அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்த்தகப் போர் தொடர்பான பதற்றமும் விலை குறைவுக்கு காரணமாக உள்ளது.
MCX சந்தையில் ஏப்ரல் 25-ஆம் தேதி அன்று மதியம் 1:55 மணி அளவில், ஜூன் மாத தங்க ஒப்பந்தத்திற்கான விலை 0.96 சதவீதம் வரை குறைந்து, 10 கிராம் ரூ.94,991-ஆக குறைந்தது இந்த விலை அதற்கு முன்னர் ஏப்ரல் 22-ஆம் தேதியன்று ரூ.99,358-ஆக அதிகரித்தது. வெறும் 3 நாட்களில் ரூ.4400-க்கும் அதிகமாக விலை குறைந்துள்ளது. இதன் காரணமாகத் தான் முதலீடாளர்கள் இனிமேலும் தங்கம் விலை உயராது என்று எண்ணி விற்பனை செய்ய தொடங்கினர்.

சீனா சில அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு வரியை குறைத்து நிவாரணம் அளிக்கும் என்று வெளியான தகவல்களின் அடிப்படையில் சர்வதேச தங்கத்தின் விலை ஒரு சதவீதத்திற்கும் மேலாக குறைந்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வர்த்தக உறவு சற்று மேம்படும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதுவும் தங்கம் விலையை கணிசமாக பாதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் வர்த்தகப் போர் ஏற்பட்டுவிடுமோ? என்ற காரணத்தினால் உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டு, தங்கத்தின் விலை உயர்ந்தது. பொதுவாக எந்த ஒரு அரசியல் கொள்கைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் அமெரிக்காவில் ஏற்பட்டாலும் அது பிற நாடுகளையும் பாதிக்கும்.
ட்ரம்ப் கொண்டு வந்த பரஸ்பர வரிமுறை தான் இதற்கு காரணம். பரஸ்பர வரிமுறை என்பது எந்தெந்த நாடுகள்.. அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுகிறதோ? அந்தந்த நாடுகளின் வரிக்கு ஏற்ப அமெரிக்காவும் வரி விதிக்கும். இந்நிலையில் டிரம்ப் நிர்வாகம் உலகளவில் அதன் வர்த்தக கூட்டாளர் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்புகளும் வலுக்கிறது.
அப்படி இருக்கையில் டாலரின் மதிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. அதுவும் தங்க விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. டாலர் இன்டெக்ஸ் 0.3% வரை உயர்ந்தது. பொதுவாக தங்கம் விலை டாலரில் தான் நிர்ணயம் செய்யப்படும். அமெரிக்க நாணயத்தின் மதிப்பு உயரும்போது பிற நாடுகளில் இருந்து தங்கம் வாங்குபவர்கள், தங்கத்திற்காக அதிகம் செலவு செய்ய வேண்டி வரலாம்.
அதுமட்டுமின்றி டாலரின் மதிப்பு குறைதல், மத்திய வங்கிகளில் அதிக அளவில் தங்கத்தை வாங்கியது, சீனா ETF-களில் அதிகம் முதலீடு செய்தது என பல காரணங்கள் உலக அளவில் தங்க விலையை பாதித்தன. உள்நாட்டில் ஸ்பாட் தங்கத்தின் விலை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று ரூ.76,000-ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு சுமார் 20,000 வரை உயர்ந்துள்ளது.
இனிவரும் காலங்களில் தங்கம் வாங்கலாமா?: தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் குறைந்திருந்தாலும்.. புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக இந்த விலை நிலையற்றதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் தங்கம் விலை குறையலாம் அல்லது மீண்டும் அதிகரிக்கலாம். இதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications