அமெரிக்காவின் தொழிலாளர் துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி அமெரிக்காவின் நுகர்வோர் பணவீக்க குறியீடு அக்டோபர் மாதத்தில் 0.9 சதவீதம் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், நவம்பர் மாதத்தில் 0.8 சதவீதம் அதிகரித்து 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கணிக்கப்பட்ட 0.7 சதவீதம் அளவை விடவும் அதிகம் என்பதால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை காப்பாற்றிக்கொள்ளப் போராடி வருகின்றனர்.
1982க்குப் பின் நடப்பு ஆண்டில் சில்லறை பணவீக்கம் 6.8 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
பொருளாதார வல்லுனர்கள்
இதேவேளையில் பல பொருளாதார வல்லுனர்கள் அமெரிக்காவின் சில்லறை பணவீக்கம் 7 சதவீதம் வரையில் உயரும் எனக் கணித்துள்ளனர். நவம்பர் மாதம் அமெரிக்காவில் உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம் 0.5 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
தங்கம் மீது முதலீடு
இதன் எதிரொலியாகப் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகள் தற்போது தங்கம் மீது திரும்பத் துவங்கியுள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1771 டாலராக இருந்த நிலையில், தற்போது 1786 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
MCX சந்தை விலை
MCX சந்தையில் பிப்ரவரிக்கான பியூச்சர்ஸ்-ன் தங்கம் விலை 0.29 சதவீதம் வரையில் உயர்ந்து 48,080.00 ரூபாயாக உள்ளது, மாலை வரையில் மந்தமாக இருந்த தங்கம் விலை உயர்வு அமெரிக்க வர்த்தகம் துவங்கிய உடன் உயர துவங்கியுள்ளது. இதேபோல் வெள்ளி விலை 0.36 சதவீதம் அதிகரித்து 61,017 ரூபாயாக உள்ளது.
அமெரிக்கப் பங்குச்சந்தை
இதேவேளையில் தற்போது அமெரிக்கப் பங்குச்சந்தை தனகு வர்த்தகத்தைத் துவங்கியுள்ள நிலையில் டாவ் ஜோன்ஸ், நாஸ்டாக் மற்றும் S&P 500 குறியீடு 0.20 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரையில் உயர்வுடன் உள்ளது. ஆனால் அதிகப்படியான தடுமாற்றம் உள்ளது.
உணவு பணவீக்கம்
அமெரிக்காவின் உணவு பணவீக்கம் 13 ஆண்டுகளுக்குப் பின் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. நவம்பர் மாதம் உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் 0.7 சதவீதம் வரையில் உயர்ந்து புட் இண்டெக்ஸ் 6.1 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. மேலும் அமெரிக்கச் சந்தையில் எரிபொருள் பணவீக்கம் பெரும் பிரச்சனையாக உள்ளது.


Click it and Unblock the Notifications