தங்கம் விலை உயர்வு.. தங்கக் கடன்களை அதிகம் வாங்கும் மக்கள்.. வெளியான அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

தங்கம் விலை தெடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக இந்தியாவில் தங்கக் கடன்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த மாதம் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை கிராமுக்கு 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் தங்கக் கடன் வழங்கும் நிறுவனங்களின் வருவாய் அதிகரித்துள்ளது. கிரிசில் ரேட்டிங்ஸ் அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் தங்கக் கடன்களுக்கான தேவை மே மாதத்தை விட 20% அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த காலாண்டில் வழங்கப்பட்ட சராசரி மாதாந்திர தங்கக் கடன்களை விட ஜூன் மாதத்தில் 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இதில் NBFC நிறுவனங்கள் 23 சதவீதத்திற்கும் அதிகமான கடன்களை வழங்கியுள்ளன.

 தங்கம் விலை உயர்வு.. தங்கக் கடன்களை அதிகம் வாங்கும் மக்கள்.. வெளியான அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!


தங்கக் கடன் வழங்குவதில் NBFC-கள் முன்னிலை: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) தங்கக் கடன்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளன. கிரிசில் அறிக்கையின்படி, NBFC நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் (AUM) 90 சதவீதமாக உள்ளது. தங்க விலை உயர்வு தங்கக் கடன் வழங்கும் NBFC-களின் வளர்ச்சியில் முக்கிய காரணமாக உள்ளது.

தங்கம் விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களை சமாளிக்க NBFC தயாராக உள்ளன. பெரும்பாலான NBFC நிறுவனங்கள் லோன்-டு-வேல்யூ (LTV) 60 சதவீதம் முதல் 65 சதவீதமாக வைத்திருக்கின்றன.

இதன் பொருள், வாடிக்கையாளரின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைப் பொறுத்து தங்கத்தின் மதிப்பில் 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்கப்படுகிறது. இதனால் தங்க விலை குறைந்தாலும், இந்த நிறுவனங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகாமல் இருக்கும்.

ரிசர்வ் வங்கியின் பணம் வழங்கல் தொடர்பான கட்டுப்பாடு: ரிசர்வ் வங்கியின் ரொக்கப் பட்டுவாடா தொடர்பான சமீபத்திய உத்தரவு சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கிரிசில் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. ரூ.20,000-க்கும் அதிகமான தங்கக் கடன்களை பணமாக வழங்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதிகமான தொகை பேங்க் அக்கவுண்ட்களில் செலுத்த வேண்டும் என்பதே அதன் கட்டுப்பாடு.

முன்னதாக, NBFC-கள் 95% தங்கக் கடன்களை வாடிக்கையாளர் வசதிக்காக பணமாக வழங்கின. டிஜிட்டல் முறையில் கடன் வழங்குவதற்கு மாறுவது புதிய வாடிக்கையாளர்களுக்கு சற்று சிக்கல் தரும் ஒன்றாக மாறலாம் என்றே கூறப்படுகிறது.

தங்கக் கடன்கள் யாருக்கு ஏற்றது?: தங்கக் கடன்கள் தங்களுடைய சொத்துக்களை விற்காமல் பணத்தை விரைவாக பெற நினைக்கும் தனிநபர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

தங்கக் கடன்கள் பொதுவாக பாதுகாப்பான ஒன்றாக இருக்கும். அதாவது அவை தனிநபர் கடன்களை விட குறைவான வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளன.

இருப்பினும், தங்கக் கடன் வாங்குபவர்கள் விதிமுறைகளை, குறிப்பாக LTV விகிதத்தைப் புரிந்துகொள்வது முக்கியம், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த திட்டமிட வேண்டும். இல்லையென்றால் நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த நகைகளை இழக்க நேரிடலாம்.

தங்கக் கடனைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், தங்கக் கடன் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

வட்டி விகிதங்களை மதிப்பிடுங்கள்: குறைவான வட்டி விகிதத்தைக் கண்டறிய வங்கிகள் மற்றும் NBFC-களில் உள்ள விகிதங்களை ஒப்பிடவும்.

LTV விகிதத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: நீங்கள் கடன் வாங்கும் தங்க மதிப்பின் சதவீதம் என்ன என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். முன்பே பார்த்தோம் 60 முதல் 65 சதவீதம் வரை மட்டுமே உங்கள் தங்கத்தின் மதிப்பில் கடன் வழங்கப்படுகிறது. அப்படியானால் நீங்கள் அதை மீட்கவில்லை என்றால் அது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு லாபம் பயக்கலாம். எனவே நீங்கள் எவ்வளவு கடன் பெறுகிறீர்கள்? அதை எவ்வளவு சீக்கிரமாக மீட்டெடுப்பீர்கள்? என்பதைத் திட்டமிடுவது முக்கியம்.

திருப்பிச் செலுத்துவதற்கான திட்டம்: அதிக அபராதம் அல்லது தங்கத்தை இழப்பதைத் தவிர்க்க நீங்கள் கடனைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

டிஜிட்டல் பேமெண்ட்டு: பல கடன் வழங்கும் நிறுவனங்கள் புல்லட் ஆப்ஷன்களை வழங்குகிறது. அதாவது நீங்கள் வாங்கிய தங்கக் கடனை திருப்பிச் செலுத்த EMI-களாக செலுத்தலாம் அல்லது உங்களிடம் எப்போது தொகை வருகிறதோ? அதை டிஜிட்டல் முறையில் வரவு வைக்கலாம். இந்த செயல்முறையின் முழு விவரங்கள் குறித்து நீங்கள் தங்க கடன்களைப் பெற்ற நிறுவனங்களிடமே தெரிந்து கொள்ளலாம்.

தங்கக் கடன் குறுகிய கால நிதித் தேவைகளுக்கு நல்ல வாய்ப்பு. ஆனால், கவனமான திட்டமிடல் மற்றும் விதிமுறைகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+