தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே பெரும்பாலான முதலீட்டாளர்கள் தற்போது தங்கம் வாங்கினால் இனி வரும் காலங்களில் லாபம் அதிகரிக்கும் என்று எண்ணுகின்றனர். அதற்காக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துகின்றனர். இன்றெல்லாம் கிரெடிட் கார்டு இல்லாத பயனர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் நகைகளை வாங்குவதற்கு கிரெடிட் கார்டை பயன்படுத்துவது நல்லதா? கெட்டதா? என்பதைப் பார்ப்போம்.
கிரெடிட் கார்டுகளுக்கு பிற லோன்களை விட அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் மாதத்திற்கே 2% முதல் 3% வரை வட்டி விகிதம் இருக்கலாம். எனவே தங்கத்தின் விலையில் ஏற்படும் அதிகரிப்பு கிரெடிட் கார்டுகளுக்கு நாம் செலுத்தக்கூடிய வட்டியை விட அதிகமாக இருக்கும் வாய்ப்பும் உள்ளது. இந்தப் பதிவில் கிரெடிட் கார்டு வைத்து ஒருவர் நகை வாங்கலாமா? அதன் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பதைப் பார்ப்போம்.

கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள்: நீங்கள் தங்கம் வாங்கும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு ரிவார்டுகள் அல்லது கேஷ்பேக் கிடைக்கும். இதை வைத்து வேறு ஏதேனும் விஷயத்தை வாங்கலாம் அல்லது மீண்டும் தங்கமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
போனஸ்: புதிதாக கிரெடிட் கார்டு வாங்கும் போது, குறிப்பிட்ட தொகைக்கு மேல் செலவு செய்தால் வெல்கம் போனஸ் கிடைக்கும். தங்கம் வாங்குவதன் மூலம் அந்த இலக்கை எளிதாக அடையலாம்.
பூஜ்ஜிய வட்டி விகிதங்கள்: சில கிரெடிட் கார்டுகள் குறிப்பிட்ட காலத்திற்கு வட்டி இல்லாமல் பணம் செலுத்த அனுமதிக்கும். இந்த சலுகையை பயன்படுத்தி, தங்கத்தை வாங்கி, தவணை முறையில் பணம் செலுத்தலாம்.
கிரெடிட் கார்டு மூலம் நகை வாங்குவதால் ஏற்படும் தீமைகள்?:
அதிக வட்டி விகிதங்கள்: நீங்கள் முழு நிலுவைத் தொகையும் சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் வட்டி கட்டணங்கள் அதிகரிக்கலாம்.
கூடுதல் கட்டணம்: சில நகைக்கடைக்காரர்கள் செயலாக்கக் கட்டணங்களை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.
கடன் பயன்பாட்டு விகிதம்: பெரும் பரிவர்த்தனையை செய்யும் போது உங்களுடைய கடன் பயன்பாட்டு விகிதம் அதிகரிக்கும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கலாம். மேலும் எதிர்காலத்தில் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
எனவே கிரெடிட் கார்டை பயன்படுத்தி நகை வாங்கும் போது கீழ்காணும் சூழ்நிலை ஏற்பட்டால் நகை வாங்குவதை தவிர்க்கலாம். அவை கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கடைக்காரர் கூடுதல் கட்டணம் வசூலித்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்படலாம். நிலுவை தொகையை முழுமையாக செலுத்த முடியவில்லை என்றால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications