தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பலரும் தங்கம் வாங்குவது குறித்து யோசித்துக் கொண்டிருப்பீர்கள். தங்கம் வெறும் முதலீடாக மட்டுமின்றி கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. குறிப்பாக இந்தியக் குடும்பங்கள் தங்கத்தினை செழிப்பான முதலீடாகக் கருதுகின்றனர். பெரும்பாலும் தாங்கள் வாங்கி வைத்திருக்கும் நகைகளை தலைமுறை தலைமுறையாகக் கொடுத்து மகிழ்கின்றனர். இவ்வளவு மதிப்புமிக்க தங்கத்தின் விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருவது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகையின் போது தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 60,282 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் 10 கிராமுக்கு 78,577 ரூபாயாக உயர்ந்துள்ளது என்று இந்திய புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேசன் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 2023-ஆம் ஆண்டின் தீபாவளிக்குப் பிறகு 30 சதவீதம் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் உள்நாட்டில் தங்கத்தின் விலை 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த சாதனை உச்சத்தை எட்டிய போதிலும் இந்த பண்டிகைக் காலத்தில் தங்கத்தின் தேவை அதிகமாக உள்ளது. மேலும் தீபாவளி பண்டிகைக்கு முன்னரே 10 கிராமின் விலை 80,000-த்தை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு தங்கம் தொடர்ந்து நம்பகமான முதலீடாக இருந்து வருகிறது. தங்கம் பணவீக்கத்திற்கு எதிராக ஒரு மதிப்புமிக்க முதலீடாகப் பார்க்கப்படுகிறது.
"தற்போதைய உலகளாவிய சூழலைப் பொறுத்தவரை, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இது ஒரு நல்ல நேரம்" என்று ஜெர்மினேட் இன்வெஸ்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தோஷ் ஜோசப் கூறியுள்ளார்.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இன்றும் அதற்கு உதாரணமாக கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்திருந்தது. இதனால் ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் விலை 7,360 ரூபாயை எட்டியது. அதேபோல 24 கேரட் தங்கத்தின் விலை 8,029 ரூபாயை எட்டியது.
2025 ஆம் ஆண்டுக்குள் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டுமா?: தங்கம் நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த தேர்வாக உள்ளது. ஏனெனில் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டையும் தங்கம் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் உள்நாட்டில் தங்கத்தின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 10 மடங்கு அதிகரித்துள்ளது.
தற்போதும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அடுத்த தீபாவளி பண்டிகைக்குள் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பரில் இருந்து ஏறக்குறைய 30 சதவீதம் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், 2025-ஆம் ஆண்டின் தீபாவளிக்குள் தங்கம் விலை 10 கிராமுக்கு 1,03,000 ரூபாயாக இருக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications