916 என்றால் என்ன? 22 கேரட்டுக்கும் 916-க்கும் என்ன வித்தியாசம்? நகை வாங்கும்போது இதை செக் பண்ணுங்க!

நேற்றைய தினம் கிராமுக்கு 50 ரூபாய் குறைந்திருந்த 1 கிராம் 22 கேரட் தங்கம், இன்று மீண்டும் உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.15,633-ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று 1 நாளில் 251 ரூபாய் அதிகரித்துள்ளது. 1 கிராம் 22 கேரட் தங்கமும் 14,330 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையைக் காட்டிலும் இன்று கிராமுக்கு 230 ரூபாய் அதிகரித்துள்ளது.

என்னதான் விலையேற்றம் தொடர்ந்தாலும் தங்கத்திற்கு எப்போதுமே மவுசு குறையாது. விலை ஏறும் நாட்களிலும் நகை கடைகளில் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அப்படி தங்கம் வாங்கும் பலர் நகைகளில் எழுதப்பட்டிருக்கும் சில விஷயங்களை கவனிப்பதே இல்லை. அதிலும் குறிப்பாக மிகச்சிறியதாக 916, 750 அல்லது 585 போன்ற நம்பர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த நம்பர் எதைக் குறிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

கடைக்கு சென்றவுடன் நம்மில் பலர் 916 தங்க நகையை மட்டும் கேட்டு வாங்குவோம். ஆனால் எதற்காக 916 என்று போடப்பட்டிருக்கிறது என்பது இன்னும் சிலருக்கு தெரியாது. உங்களுடைய பணத்திற்கு ஏற்ற தங்கம் கிடைக்கிறதா என்பதை குறிப்பதே இந்த எண்கள் தான்.

916 என்றால் என்ன? 22 கேரட்டுக்கும் 916-க்கும் என்ன வித்தியாசம்?

916 என்றால் என்ன?: தங்கத்தின் தூய்மையை மதிப்பிட கேரட் என்ற அளவுகோலை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அந்த கேரட்டின் சதவீதத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுவது தான் இந்த எண்கள். எளிமையாக சொல்ல வேண்டுமானால் தங்கத்தின் தூய்மையை மதிப்பிட பயன்படுவது.

இந்தியாவில் பெரும்பாலான ஆபரணங்கள் 916 ரகத்தைச் சேர்ந்தவை. இதில் 91.6% தூய தங்கம் இருக்கும். இதைத்தான் 22 கேரட் தங்கம் என்று அழைக்கிறோம். மீதமுள்ள 8.4 சதவீதத்திற்கு வெள்ளி, செம்பு அல்லது காப்பர் போன்ற உலோகங்கள் கலக்கப்பட்டிருக்கும். தங்கம் மிகவும் மென்மையான உலோகம் இதை ஆபரணமாக மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அப்படி மாற்றினாலும் அவை உடைந்து விடும் அபாயம் உண்டு. அதனால் தான் 24 கேரட்டை விட 22 கேரட் தங்கத்தில் நகைகள் செய்யப்படுகிறது. 916 தங்கமும், 22 கேரட் தங்கமும் ஒன்றுதான். சிலர் இரண்டும் வெவ்வேறு என்று நினைத்து கொள்கின்றனர்.

750 என்றால் என்ன?: 750 என்பது 18 கேரட் தங்கத்தை குறிக்கிறது. இதில் 75 சதவீதம் மட்டுமே தூய தங்கம் இருக்கும். வைர நகைகள் மற்றும் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகளுக்கு 18 கேரட் பயன்படுத்தப்படுகிறது. கற்களை உறுதியாக பிடித்துக் கொள்வதற்கு 18 கேரட் உதவுகிறது. தற்போது சந்தையில் ரோஸ் கோல்ட் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. ரோஸ் கோல்ட் வாங்கினாலும் அவை 18 கேரட் தங்கத்தில் தான் இருக்கும்.

585 என்றால் என்ன?: 585 என்பது 14 கேரட் தங்கத்தை குறிக்கிறது. இதில் வரும் 58.5% தான் தூய தங்கம் இருக்கும். எடை குறைந்த நகைகள் செய்ய இது போன்ற 14 கேரட் தங்கம் பயன்படுகிறது.

999 என்றால் என்ன?: 999 என்பது 24 கேரட் தங்கத்தை குறிக்கிறது. இதில் 99.9% தூய தங்கம் இருக்கும். இதைத்தான் 24 கேரட் தங்கம் என்று அழைக்கிறோம். இருப்பதிலேயே மிகவும் தூய்மையான தங்கம் 24 கேரட் தங்கம். இவை மிகவும் மென்மையாக இருப்பதால் கோல்ட் காயின்கள் மற்றும் கோல்டு பார்கள் மட்டுமே செய்ய முடியும். முதலீடு செய்ய நினைப்பவர்கள் 24 கேரட் தங்கத்தை வாங்கலாம்.

BIS ஹால்மார்க் என்றால் என்ன?: இந்தியாவில் தங்கத்தின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உறுதி செய்வதற்காக பியூரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் (BIS) ஹால்மார்கிங் முறையை கொண்டு வந்தது. 916 தங்கமாக இருந்தால் 916 என்ற எண் மற்றும் HUID நம்பர் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். HUID என்பது ஹால்மார்க் யுனிக் ஐடென்டிபிகேஷன் நம்பர். இது ஆறு இலக்க எண். இதை வைத்தே நீங்கள் வாங்கிய தங்கத்தின் தரம் எப்படி இருக்கிறது என்பதை ஆன்லைனில் சரி பார்க்கலாம். இனி கடைக்கு போகும் போது நீங்கள் வாங்கும் தங்கத்தில் எந்த நம்பர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+