டிசம்பர் 11-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதற்கு முன்பு 3 நாட்கள் நிலையாக எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. நேற்றைய தினம் கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், இன்று 80 ரூபாய் அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு ஷாக் தந்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,285-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.7,947-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்: நேற்றைய தினம் தங்கம் விலை 60 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,205-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 57,640-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.72,050-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,860-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.62,880-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.78,600-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,950-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,600-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.59,500-க்கும் விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து ரூ.7,285-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 640 அதிகரித்து ரூ. 58,280-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 800 அதிகரித்து ரூ.72,8500-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.87 அதிகரித்து ரூ. 7,947-க்கும், 1சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 696 அதிகரித்து ரூ. 63,576-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 870 அதிகரித்து ரூ.79,470-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.65 அதிகரித்து ரூ.6,015-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 520 அதிகரித்து ரூ.48,120-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.650 அதிகரித்து ரூ.60,150-க்கும் விற்பனையாகிறது.
கோவை, மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் 104 ரூபாய்க்கு விற்பனையானது. சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் இன்றைய தினம் 1 கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications