டிசம்பர் 23-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் விற்பனையாகிறது. நேற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சனிக்கிழமை அன்று கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்திருந்த தங்கம் விலை.. அதே விலையில் தொடர்கிறது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,100-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,745-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய (23/12/24) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,100-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 56,800-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,000-த்திற்க்கும் விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,745-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 61,960-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,450-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,865-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 46,920-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,650-க்கும் விற்பனையாகிறது.
டிசம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. அதன்படி மிகப்பெரிய விலை ஏற்றம் டிசம்பர் 11-ஆம் தேதி அன்று இருந்தது. அன்றைய தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,285-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,947-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த விலை டமாலென குறைந்து டிசம்பர் 14-ஆம் தேதி அன்று ரூ. 7,140 ரூபாயை எட்டியது. அதன் பிறகு மீண்டும் டிசம்பர் 20-ஆம் தேதி அன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது இந்த விலை 60 ரூபாய் அதிகரித்து கடந்த இரண்டு நாட்களாக நிலையாக உள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை கிராம் 98.90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி ரூ. 98,900-த்திற்கு விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications