ஜனவரி 1-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்திருக்கிறது. பொதுவாகவே எந்த ஒரு பண்டிகை காலம் வந்தாலும் அப்போது நகைக்கான டிமாண்ட் அதிகரித்து தங்கத்தின் விலை அதிகரிக்கும். அதே போலவே இந்த புத்தாண்டுக்கும் தங்கத்தின் விலை அதிகரித்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,150-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,800-க்கும் விற்பனையாகிறது. இந்தப் பதிவில் சென்னை, கோவை, மதுரை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
நேற்றைய (31/12/2024) தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோவை மற்றும் மதுரையில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,110-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 56,880-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.71,100-க்கும் விற்பனையானது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 7,756-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 62,048-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 77,560-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 5,875-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ.47,000-த்திற்க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 58,750-க்கும் விற்பனையானது.
இன்றைய (01/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 40 அதிகரித்து ரூ. 7,150-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 400 அதிகரித்து ரூ. 57,200-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 250 அதிகரித்து ரூ.71,500-க்கும் விற்பனையாகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 44 அதிகரித்து ரூ. 7,800-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 352 அதிகரித்து ரூ. 62,400-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 440 அதிகரித்து ரூ. 78,000-த்ற்க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 30 அதிகரித்து 5,905-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 240 அதிகரித்து ரூ. 47,240-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 300 அதிகரித்து ரூ. 59,050-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.98-த்திற்கு விற்பனையாகிறது.


Click it and Unblock the Notifications