மே 30 சனிக்கிழமையான இன்றும் தங்கம் விலை அதிகரித்திருக்கிறது. பொதுவாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்க விலையில் அவ்வளவாக மாற்றம் இருக்காது. ஏனெனில் சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இன்றைய தினம் அதற்கு நேர்மாறாய் தங்கத்தின் விலை கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றும் தங்க விலை 100 ரூபாய் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் விலை உயர்வு தென்படுகிறது.
ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 32 ரூபாய் அதிகரித்து ரூ.15,960-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.14,630-க்கும், 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.30 அதிகரித்து ரூ.14,630-க்கும், 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ.20 அதிகரித்து ரூ.12,275-க்கும் விற்பனையாகிறது.
இன்று ஒரு நாளில் 1 பவுன் 24 கேரட் தங்கம் ரூ.256 அதிகரித்து, ரூ.1,27,680-க்கு விற்பனையாகிறது. 1 பவுன் 22 கேரட் தங்கம் ரூ.240 அதிகரித்து ரூ. 1,17,040-க்கு விற்பனையாகிறது. நேற்று இன்றும் வைத்து பார்க்கும் போது 1 பவுன் விலை 1,000 ரூபாயைக் கடந்துள்ளது. 24 கேரட் தங்கத்தை முதலீட்டுக்காக வாங்குவார்கள், 22 கேரட் தங்கத்தை ஆபரணமாக வாங்குவார்கள். இரண்டின் விலையுமே நேற்றும், இன்றும் உயர்விலேயே இருந்து வருகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரம்: நேற்று கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்திருந்த வெள்ளி, இன்று எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது. இன்றைய தினம் 1 கிராம் வெள்ளி ரூ.290-க்கு விற்பனையாகிறது.
தங்கம் மட்டுமல்ல வெள்ளியும் முதலீட்டாளர்களுக்கு சிறந்த ரிட்டன்ஸ்-ஐ கடந்த காலங்களில் வழங்கியுள்ளது. ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் மே மாதம் வெள்ளியின் விலை 9.43 சதவீதம் வரை அதிகரித்தது. மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதம் 1.89 சதவீதம் வரை விலை உயர்வு தென்பட்டது. போகும் போக்கை பார்த்தால் தங்கம் மட்டுமல்ல வெள்ளியும் இனி தொடர்ந்து உச்சத்தை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி வரி உயர்வுக்குப் பிறகு படிப்படியாக விலை ஏற்றம் எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது. கடந்த 10 நாட்களில் நேற்றைய தினம் தான் அதிகபட்சமாக 100 ரூபாய் அதிகரித்தது. ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதம் தங்க விலை 5.10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் பெரிதாக மாற்றம் ஒன்றும் இல்லை. வெறும் 0.36 சதவீதம் தங்க விலை உயர்ந்தது.
புவிசார் அரசியல் பதற்றங்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, பொருளாதார நிச்சயமஅற்ற தன்மைகள் போன்றவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை இதேபோல தொடரும் என்ற கருத்தையே நிபுணர்களும் முன்வைக்கின்றனர். அதிலும் சிலர் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை எட்டும் நாள் தொலைவில் இல்லை என்றும் கூறியுள்ளனர். இது உண்மையில் பழித்து விடும் சூழல்தான் நிலவிவருகிறது.


Click it and Unblock the Notifications