2025 நவம்பரில் தங்கம் வாங்கியவர்களுக்கு ஏமாற்றமா? 1 வருடத்தில் தங்கத்தை விட அதிக லாபம் கொடுத்த FD!

கடந்த 10 ஆண்டுகளில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது. ஆனால் கடந்த 1 வருடத்தில் தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமுமாய் இருந்து வந்த காரணத்தினால் ஒப்பீட்டளவில் பார்க்கும்போது மிகக் குறைவான லாபத்தையே வழங்கியுள்ளது. இதனால் 2025-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் தங்கத்தில் முதலீடு செய்த நபர்களுக்கு கிடைத்த லாபம் வங்கிகளில் வழங்கக்கூடிய ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களின் வட்டி விகிதத்திற்கு இணையாகவே இருக்கிறது .

ஓராண்டில் தங்கத்தின் விலை நிலவரம்: 2026-ஆம் ஆண்டின் நவம்பர் 15-ஆம் தேதி நிலவரப்படி தங்கத்தின் 10 கிராம் விலை 1,26,140 ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் அதே 10 கிராம் தங்கத்தின் விலை 1,27,000 ரூபாயாக இருந்தது. இது சுமார் 7.68 சதவீத வளர்ச்சியை குறிக்கிறது. இந்த கணக்கீட்டில் வெறும் மார்க்கெட் ரேட் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது. வரி, செய்கூலி மற்றும் இதர செலவுகள் யாவும் சேர்க்கப்படவில்லை.

2025 நவம்பரில் தங்கம் வாங்கியவர்களுக்கு ஏமாற்றமா? 1 வருடத்தில் தங்கத்தை விட அதிக லாபம் கொடுத்த FD!

ஆபரணத் தங்கம் வாங்கியவர்களுக்கு எவ்வளவு லாபம்?: ஆபரணத் தங்கம் வாங்கும்போது 3 சதவீத ஜிஎஸ்டி, செய்கூலி, சேதாரக் கட்டணம் ஆகியவற்றை சேர்த்துதான் வாங்க வேண்டும். கோல்ட் காயின்களுக்கு செய்கூலி, சேதாரம் கிடையாது .இருந்தாலும் டையிங் சார்ஜ் போன்ற கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.

எனவே வரி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றையெல்லாம் சேர்த்தால் கடந்த ஆண்டு நவம்பரில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,30,810 ரூபாயாக இருந்திருக்கும். ஆனால் தற்போதைய சந்தை நிலவரங்களின்படி இன்றைய தங்கத்தின் விலையோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு ஆபரணம் வாங்கியவர்களுக்கு 4.54 சதவீதம் மட்டுமே வருமானம் கிடைத்திருக்கும். இதில் நகை கடைக்காரர்களின் லாபவரம்பு, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை கழித்து விட்டு பார்த்தால் நிகர லாபம் இன்னும் குறைவாகவே இருக்கும்.

Also Read

ஃபிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம்: தங்கம் பிக்சட் டெபாசிட்களை விட குறைவான லாபத்தையே இந்த முறை வழங்கியுள்ளது. சில ஸ்மால் பைனான்ஸ் வங்கிகள் 8.10 முதல் 8.25% வரை வட்டி வழங்குகின்றன. ஆனால் இந்த வட்டி விகிதம் எல்லா வங்கிகளுக்கும் பொருந்தாது.

எது சிறந்தது?: தங்கத்தையும், பிக்சட் டெபாசிட் திட்டங்களையும் நேரடியாக நம்மால் ஒப்பிட முடியாது. ஏனெனில் இரண்டும் வெவ்வேறு தன்மையை கொண்டவை. தங்கத்தின் விலை தினசரி அடிப்படையில் ஏற்ற இறக்கங்களுக்கு உட்படும். இதில் நிலையான வருமானம் கிடைக்கும் என்று யாராலும் கணிக்க முடியாது.

ஆனால் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் அப்படி கிடையாது. முதலீடு செய்யும் போதே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் நிலையான வருமானம் கிடைக்கும். வங்கிகளில் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு முதலீட்டாளர்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

அதே சமயம் தங்கத்திற்கான வரி விதிப்பு என்பது முதலீட்டு முறை மற்றும் அதை வைத்திருக்கும் கால அளவைப் பொறுத்து மாறுபடலாம். எனவே தங்கம் வாங்கும்போது ஏற்படும் செலவுகளை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த ஒரு ஆண்டில் தங்கத்தை விட சில வங்கிகளின் பிக்சட் டெபாசிட் திட்டம் அதிக லாபத்தை வழங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+