பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் போர்ட்ஃபோலியோ ரெட் கலரில் மின்னுவதைப் பார்த்து அலுத்து போனவர்களுக்கு, தங்கம் மற்றும் வெள்ளி ETF-களின் அசுர வளர்ச்சி ஒரு மிகப்பெரிய ஆச்சரியமாக மாறியிருக்கிறது. 2025-ல் பங்குச்சந்தை ஆமை வேகத்தில் நகர, தங்கம் மற்றும் வெள்ளி கொடுத்த 75% முதல் 120% வரையிலான ரிட்டர்ன்ஸ், பங்குகளை விற்று தங்கத்தில் போடலாமா என்ற விவாதத்தை சூடாக்கியுள்ளது.
ஒரு புறம் நிஃப்டி தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக காத்திருக்க, மறுபுறம் உலக அரசியல் பதற்றங்களால் தங்கம் ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. ஆனால், கண்ணை மூடிக்கொண்டு பங்குகளை விற்றுவிட்டுத் தங்கத்திற்கு மாறுவது ஒரு புத்திசாலித்தனமான முடிவா? அல்லது அது ஒரு மொமெண்டம் மோகமா? 2026-ல் பணத்தைப் பாதுகாக்க நிபுணர்கள் கூறும் அந்த மாஸ்டர் பிளான் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்..

தங்கம் சார்ந்த முதலீடுகளும் ஏற்றம்!
தங்கம், வெள்ளியானது இன்று சர்வதேச சந்தையில் வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் எட்டியுள்ள சூழலில், இந்திய சந்தையிலும் உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை மட்டுமல்ல, தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த முதலீடுகளும் கிடு கிடு ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி இடிஎஃப்-க்கள் 5% வரையில் ஏற்றம் கண்டு முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம், வெள்ளியானது தொடர்ந்து உச்சத்தை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், மந்த நிலையில் காணப்படும் பங்குச் சந்தையானது பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால் பல முதலீட்டாளர்களும் பங்குகளில் இருந்து, தங்கம், வெள்ளிக்கு முதலீடுகளை மாற்றலாமா என யோசித்து வருகின்றனர்.
பங்குச் சந்தையில் ஏன் தடுமாற்றம்!
பங்குச் சந்தையில் நிலவில் வரும் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக அதிகப்படியான மதிப்பீடு என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏஐ மற்றும் தொழில்நுட்பத் துறை பங்குகள், அவற்றின் உண்மையான மதிப்பை விட அதிகமாக வர்த்தகமாகின்றன. மேலும் சமீபத்திய காலமாக வெளியாகி வரும் காலாண்டு முடிவுகள், பல நிறுவனங்களின் கடன் விகிதம் அதிகரித்து வருவதையும், லாபம் ஈட்டும் திறன் குறித்த சந்தேகங்களும் முதலீட்டாளர்களைக் குழப்பமடைய செய்துள்ளன.
மேலும் இந்திய பங்குச் சந்தையானது சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு சவால்களை எதிர் கொண்டுள்ளது. குறிப்பாக அரசியல் பதற்றங்கள், பொருளாதாரத்தின் மெதுவான வளர்ச்சி, வர்த்தக பதற்றம், புவிசார் அரசியல் பதற்றங்கள் என பலவும் சந்தையில் ஒரு விதமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான் தங்கம் மற்றும் வெள்ளி ஆனது கவர்ச்சிகரமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. பாதுகாப்பான சொத்தாகவும் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து மத்திய வங்கிகள் உலகளாவிய பதற்றமான சூழலுக்கு மத்தியில் தங்கத்தை வாங்கலாம் என்றும், இது தங்கம் மற்றும் வெள்ளி விலைக்கு ஆதரவாக அமையலாம் என்று எதிர்பார்க்கிறது. குறிப்பாக தங்கம் வலுவான ஏற்றம் காணலாம் என்றும், வெள்ளியின் தேவையும் தொழில்துறையில் வலுவாக காணப்படுவது, அதற்கு ஆதரவாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றம், மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவான ஒன்றாக அமையலாம். இதனிடையே தான் பங்கு சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு காரணம் கருதி வெளியேறி வருகின்றனர். இது சந்தையில் ஏற்ற இறக்கத்தை அதிகரித்துள்ளது. மாறாக தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளியை அடிப்படையாகக் கொண்ட இடிஎஃப்-களிலும் முதலீடானது அதிகரித்து வருகிறது. இருப்பினும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்தில் இருப்பதால். இப்போது புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
ஏன் கவனம்?
1. இது நுழைவதற்கான நேரமல்ல: தொடர்ந்து விலை உயர்ந்து வரும் தங்கம், வெள்ளியை பார்த்து, ஆசைப்பட்டு இப்போது புதிதாக முதலீடு செய்வது ஆபத்தானது. இது புதிய முதலீடுகளுக்கான சரியான நுழைவு புள்ளி அல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமீபத்திய லாப வேகத்தை பின்தொடர்வது, உச்சத்தில் வாங்கி சிக்கிக் கொள்வதற்கு சமம் என்கிறார்கள். ஆக கவனமுடன் செயல்படுவது நல்லது.
2. ஈக்விட்டி தான் வெல்த் கிரியேட்டர்: பதற்றமான காலங்களில் தங்கம் கை கொடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் நீண்ட கால அடிப்படையில் செல்வத்தை உருவாக்குவது என்னவோ பங்குச் சந்தை தான். ஆக உங்கள் போர்ட்ஃபோலியோவின் பெரும்பகுதியை தங்கத்திற்கு மாற்றுவது சரியான முடிவாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
3. லாபத்தை புக் செய்யுங்கள்: தற்போது தங்கம் மற்றும் வெள்ளி உச்சத்தில் இருப்பதால், புதிதாக பணம் போடுவதற்கு பதில், ஏற்கனவே முதலீடு செய்திருப்பவர்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை புக் செய்யலாம் என்கின்றனர்.
பங்குச் சந்தையில் இருந்தே வெளியேறினாலும், ஒரு சிறிய பகுதியை மட்டும் படிப்படியாக தங்கம் அல்லது வெள்ளி இடிஎஃப்-களுக்கு மாற்றலாம். இது பணவீக்கம் மற்றும் சந்தை சரிவிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். அதோடு ஒரே அடியாக முதலீடு செய்யாமல், விலை குறையும் காலங்களில் சிறுக சிறுக சேர்ப்பதே புத்திசாலித்தனம். எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் முதலீட்டு காலம் மற்றும் இலக்கை பொறுத்தே தங்கம் தேவையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என ஆனந்த் ரதி அறிக்கையானது குறிப்பிடுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications