ஹாங்காங்: கடந்த மாதம், மார்ச் 27ஆம் தேதி ஹாங்காங் இல், கிட்டத்தட்ட பத்து மில்லியன் டாலர் மதிப்புள்ள, சுமார் 146 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்கம் ஜப்பானுக்கு புறப்பட இருந்த, ஒரு சரக்கு விமானத்திலிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றினார். இப்போது கைப்பற்றிய இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு இதுவரை ஹாங்காங்கில் கடத்தப்பட்ட தங்க நகை கடத்தல் வரலாற்றில் மிகப்பெரியது என கூறுகிறார்கள்.
மேலும் இதில் என்ன சுவாரசியம் என்றால் கடத்தப்பட்ட தங்கங்கள் அனைத்தும் இயந்திர பாகங்கள் போல மாற்றி அதில் சில்வர் கலரை பூசி, தந்திரமாக கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மார்ச் 27ஆம் தேதி அன்று சுங்க அதிகாரிகள் இந்த தங்கங்களை இரண்டு ஏர் கம்ப்ரஸர்களை எக்ஸ்ரே செய்து, அந்த கம்ப்ரஸர்களில் மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தை கண்டுபிடித்தனர். மேலும் அதனை இயந்திர பாகங்கள் போல சித்தரிக்க சில்வர் கலர் பூசி கொண்டுவந்துள்ளனர். சில்வர் முலாம் பூசி, அதற்குள் தங்கத்தினை அடைத்து வைத்து தந்திரமாக செயல்பட்டுள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் இவ்வாறு மாறுவேடமிட்ட தங்கம் கண்டெடுக்கப்படுவது, இதுவே முதல் முறை என்று மூத்த கண்காணிப்பாளர் ஜேசன் லவ் யுக்-லுங் சவுத் சைனா தெரிவித்தார். ஜப்பானின் 10 சதவீத இறக்குமதி வரியைத் தவிர்க்கும் முயற்சியில் இத்தகைய கடத்தல் சம்பவத்தில், கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விலைமதிப்பற்ற உலோகம் வெற்றிகரமாக நாட்டிற்குள் கடத்தப்பட்டிருந்தால், கடத்தல்காரர்கள் HK$8.4 மில்லியன் ($1 மில்லியன்) வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்று லாவ் கூறினார்.
ஒரு அறிக்கையில், ஹாங்காங் சுங்க மற்றும் கலால் துறை, தாங்கள் கைப்பற்றிய, புத்திசாலித்தனமாக மறைத்து வைக்கப்பட்ட தங்கத்தின் பின்னணியில் இருந்ததாக அவர்கள் நம்பும் 31 வயதுடைய ஒருவரைக் கைது செய்ததாகக் கூறியது. அதிகாரிகள் விசாரணையைத் தொடர்ந்த நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர்கள் அவரது பெயரை வெளியிடவில்லை, ஆனால் லாவின் கூற்றுப்படி, அவர் ஹாங்காங்கில் உள்ள ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார், அது உண்மையில் ஒரு ஷெல் நிறுவனமாக இருக்கலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த நபருக்கு அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் HK$2 மில்லியன் வரை அபராதம் அல்லது அமெரிக்க டாலர்களில் $255,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
உலகின் மிகப்பெரிய தங்க வர்த்தக மையங்களில் ஒன்றான ஹாங்காங், கடந்த பிப்ரவரியில் மாதத்தில் கடத்தல் முயற்சியில் ஈடுபட மற்றொரு நபரைக் கைது செய்தது. இவர் தங்க கட்டிகளை கடத்த முயனற்றுள்ளார். இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாக தங்க கடத்தலை சுங்க வரி அதிகாரிகள் தடுத்துள்ளனர்.
இரண்டு வழக்குகளிலும் மக்காவோ செல்லும் வாகனங்கள் மூலம் $1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கத்தை கடத்தியது தெரியவந்தது.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் விலைமதிப்பற்ற உலோகத்தின் விலைகள் 2024 இல் தொடர்ச்சியான சாதனை உச்சத்தை எட்டியுள்ளன. தங்கத்தின் ஸ்பாட் விலை திங்களன்று அமெரிக்காவில் அதிகபட்சமாக $2,340 க்கு மேல் ஆகும்.


Click it and Unblock the Notifications