ஏப்ரல் மாதம் பிறந்ததிலிருந்து தங்கம் வரலாறு காணாத உச்சத்தை எட்டி வருகிறது. அதே நேரத்தில் பிட்காயின் விலையில் பெரிய மாற்றமின்றி குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே அப்படியே நீடிக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் நேரங்களில் தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது. இதனால் பல முதலீடாளர்களும் தங்கத்தின் பக்கம் திரும்புகின்றனர். அனைத்திந்திய நகை வியாபாரிகள் சங்கத்தின் தகவல்படி வியாழக்கிழமை அன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.98,170 என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது.
உலகளாவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாலும், புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் போன்றவற்றின் காரணமாக பாதுகாப்பான சொத்துகளுக்கு முதலீட்டாளர்கள் திரும்புவதாலும் இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று 24 கேரட் தங்கம் ரூ.1650 உயர்ந்து 10 கிராம் ரூ. 98,100-ஆக அதிகரித்தது. 24 கேரட்டில் 99.9% தூய தங்கம் இருக்கும்.

விஸ்டம் ஹேட்ச் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முழு நேர முதலீட்டாளராக இருக்கும் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா, தனது X பக்கத்தின் சமீபத்திய பதிவில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும்போது பிட்காயின் அதே அளவில் பின்தங்கி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க பங்கு சந்தைகள் சரிவடையும் நேரத்தில் முதலீட்டாளர்கள் பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்காக அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வார்கள். இதுதான் நீண்ட காலமாக இருந்து வரும் மரபாக இருக்கிறது. ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் வர்த்தக போர் இந்த வழக்கமான விஷயத்தை பாதித்துள்ளது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையும், பத்திரச் சந்தையும் அழுத்தத்தில் இருந்து வருகிறது, முதலீட்டாளர்கள் இதன் காரணமாக தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று எண்ணி தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
பிட்காயின் முக்கியமாக அரசாங்கங்கள் அதிகமாக பணம் அச்சிடுவதால் ஏற்படும் பணவீக்கத்திற்கு எதிராக பாதுகாப்பான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் நெருக்கடியான காலங்களில் முதலீட்டாளர்கள் நாடும் பாதுகாப்பான முதலீடாக இது இருக்காது. பிட்காயினை டிஜிட்டல் தங்கம் என்று பலர் கூறினாலும் உண்மையில் தங்கமும் பிட்காயினும் வெவ்வேறு மாதிரியான சொத்துக்கள். தங்கத்திற்கும் பிட்காயினுக்கும் இடையே எந்தவிதமான போட்டியும் இல்லை. இரண்டுக்குமே தனித்தனியான ஆதரவாளர்கள் இருக்கின்றனர் என்று கூறி தனது பதிவில் எழுதியிருந்தார்.
இவருடைய பதிவை பார்க்கும் போது தங்கத்திற்கு நிகராக பிட்காயினை வைக்க கூடாது என்பது தெளிவாகிறது. பணவீக்கத்திற்கு எதிராக பிட்காயின் செயல்பட்டாலும் உண்மையாக பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஏற்படும் சூழலில் பாதுகாப்பான முதலீடாக தங்கம் இருக்கும் என்பதுதான் இவருடைய கருத்தாக உள்ளது.
More From GoodReturns

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications