உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ், டெக் நிறுவனங்களை போலவே தனது தொழில்நுட்ப புரட்சியைத் தொடங்கியுள்ளது. ஏஐ இன்று அனனைத்து துறையிலும் வந்துள்ள நிலையில், இதை எப்படி சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதில் தான் அதிகப்படியான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோல்ட்மேன் சாக்ஸ் காபி பிரேக் செல்லாத, லீவ் கேட்காத, அதிக போனஸ் கேட்காத AI சக்தி கொண்ட சாப்ட்வேர் டெவலப்பர் டெவின் (Devin) அறிமுகமாகியுள்ளது. டெவின் அறிமுகம் கார்ப்ரேட் துறையில் இருக்கும் வொயிட் காலர் லேலைவாய்ப்புகளுக்கு பெரும் தலைவலியாக மாறும் என கூறப்படுகிறது.

டெவின், ஒரு AI சக்தி கொண்ட சாப்ட்வேர் டெவலப்பர், ஒரு மனிதரைப் போலவே துல்லியமாக கோடிங் செய்ய முடியும் என்று கோல்ட்மன் சாக்ஸ் தெரிவிக்கிறது. கோல்ட்மேன் சாக்ஸ்-ன் தலைமை தகவல் அதிகாரியான மார்கோ அர்ஜென்டி (Marco Argenti) கூறுகையில், டெவின் முழு என்ட் டூ என்ட் (end-to-end) கோடிங் பணிகளை செய்யும் திறன் கொண்டதால், ஊழியர்களின் உற்பத்தித்திறன் முந்தைய AI கருவிகளை விட மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
Devin குறித்து மார்கோ அர்ஜென்டி CNBC-க்கு அளித்த பேட்டியில், டெவின் இனி எங்கள் நிறுவனத்தின் புதிய ஊழியராக விளங்கும். டெவின் இந்நிறுவனத்தில் இருக்கும் சாப்ட்வேர் டெவலப்பர்கள் போலவே பணிகளை ஏற்று செய்யத் தொடங்கும் என்று கூறினார்.
டெவினின் வெற்றி AI மற்றும் மனிதர்கள் ஒன்றிணைந்த நிறுவனத்தில் "ஹைப்ரிட் வொர்க்ஃபோர்ஸ்" (hybrid workforce) உருவாகும் முதல் படியாக இருக்கும் சந்தை வல்லனர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் டெவினின் வெற்றி பல நிறுவனங்களில் ஆண்டுக்கு 180,000 டாலர் சம்பளம் பெறும் ஒரு சாப்ட்வேர் டெவலப்பர்களை நியமிக்க வேண்டிய அவசியத்தை நீக்கும்.
புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் ஆபத்து:
கோல்ட்மன் சாக்ஸ் Devin-ஐ அறிமுகம் செய்த உடன் டெக் ஊழியர்களை நியமிப்பதை நிறுத்தி விட்டதா என்றால் இல்லை. இன்னும் உலகெங்கிலும் பல பணிகளுக்கு ஊழியர்களை பணியில் சேர்த்து கொண்டு தான் வருகிறது. சொல்லப்போனால் நியூயார்க்கில் சில பணிகளுக்கு ஆண்டுக்கு 115,000 டாலர் முதல் 180,000 டாலர் வரையிலான சம்பளத்தில் பணியில் சேர்க்கின்றனர்.
ஏஐ தளமான அன்த்ராபிக் நிறுவனத்தின் CEO டேரியோ அமோடி (Dario Amodei) கூறுகையில், ஐந்து ஆண்டுகளுக்குள் AI அனைத்து ஆரம்ப நிலை வொயிட் காலர் வேலைகளில் 50 சதவீதத்தை நீக்கிவிடும் என்று கணித்துள்ளார்.
இந்த மாற்றம் தொழில்நுட்ப உலகில் ஒரு பெரிய புரட்சியாக பார்க்கப்பட்டாலும் டெக் துறையில் பணியாற்றும் மக்களுக்கு புதிய பயத்தை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கோல்ட்மேன் சாக்ஸ் மாட்டும் தான் இத்தகைய ஏஐ மென்பொருளை அறிமுகம் செய்கிறதா என்றால் இல்லை.
ChatGPT Agent அறிமுகம்:
அனைத்து நிறுவனங்களும் இத்தகைய ஏஐ டெவலப்பர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓபன்ஏஐ நேற்று AI Agents-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு வேளையை படிப்படியாக செய்யும் திறன் கொண்டது மட்டும் அல்லாமல் இதில் டீர் ரிசர்ச் மற்றும் ஆப்ரேட்டர் திறனும் கொண்டு இருக்கும் காரணத்தால் கடினமான சேவையை கூட எளிதில் முடிக்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஒருபக்கம் நிறுவனங்கள் தனிப்பட்ட முறையில் உருவாக்கும் Devin, மறுபக்கம் அனைத்து நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட ChatGPT Agent என ஏஐ அனைத்து இடத்திலும் வர துவங்கியுள்ளது. இதனால் அதிக சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் இனி மெல்ல மெல்ல குறைய துவங்கும்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications