பங்குச்சந்தை முதலீட்டுக்கு வேட்டு.. பெரியளவில் சரிய போகுது.. Goldman Sachs டேவிட் சொன்ன ஷாக் தகவல்..!

இந்திய மக்களின் முதலீட்டில் பங்குசந்தை இப்போது முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நிலையில், பங்குச்சந்தையில் ஏற்படும் சரிவு அதிகப்படியான மக்களை பாதித்து வருகிறது. இந்திய பங்குச்சந்தை பொதுவாக வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கத்தில் இருந்த நிலை தற்போது மாறி, உள்நாட்டு முதலீட்டாளர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.

ஆனாலும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆதிக்கம் இன்னும் அதிகமாகவே உள்ளது, இவர்களின் முதலீட்டு போக்கு தான் ஒட்டுமொத்த சந்தையை திரும்புகிறது என்றால் மிகையில்லை.

பங்குச்சந்தை முதலீட்டுக்கு வேட்டு.. பெரியளவில் சரிய போகுது.. Goldman Sachs டேவிட் சொன்ன ஷாக் தகவல்!

இப்படியிருக்கும் சூழ்நிலையில் கோல்டுமேன் சாக்ஸ் தலைலர் டேவிட் கூறிய விஷயங்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயமாக மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக டெக் துறையில் அதிகம் முதலீடு செய்துள்ளவர்கள், அமெரிக்க பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளவர்குக்கு டேவிட் சொன்ன விஷயம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸின் தலைவர் மற்றும் சிஇஓ-வான டேவிட் சாலமன், பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அடுத்த 12 முதல் 24 மாதங்களுக்குள் பங்குச் சந்தையில் கணிசமான சரிவு (drawdown) ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் கூறுகிறார்.

இத்தாலியின் டுரின் நகரத்தில் நடைபெற்ற இத்தாலியன் டெக் வீக் நிகழ்ச்சியில் பேசிய சாலமன், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் அதிரடி வளர்ச்சி மற்றும் அடுத்த தலைமுறை டெக் வளர்ச்சிக்கு அதன் முக்கியதுவத்தால் ஏற்பட்ட பங்குச்சந்தை உயர்வுக்குப் பிறகு, இத்துறையில் ஏற்பட உள்ள சில மாற்றங்கள், பங்குச்சந்தையில் பெரும் சரிவு வரலாம் என்று பேசியுள்ளார்.

டேவிட் சாலமன் இதுக்குறித்து விளக்கும் போது, பங்குச்சந்தைகள் எப்போதும் ஒரு சுழற்சியில் இயங்கும், இந்த இயக்கத்தை புரிந்துக்கொண்டவர்கள் தான் அதிகப்படியான லாபத்தை அடைகின்றனர்.

அந்த வகையில் ஏஐ தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புதிய வேகம், இத்துறையை சார்ந்து பல புதிய நிறுவனங்கள் உருவாகி, இந்த நிறுவனத்தில் மூலதனம் அதிகரித்துள்ளது. இதனால் ஏஐ தொழில்நுட்பத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுப்பட்டு இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் இக்காலக்கட்டத்தில் பங்குச்சந்தையின் சராசரியை காட்டிலும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இங்கு தான் பங்குச்சந்தைகளின் சுழற்சி துவங்குகிறது. வரலாற்று ரீதியாக நாம் பார்க்கும் போது, எந்தொரு புதிய தொழில்நுட்ப, உற்பத்தி, பொருட்களின் நுகர்வு அதிகரித்தால் இதை சுற்றியுள்ள பல புதிய நிறுவனங்கள் உருவாகி, அதன் பங்கு மதிப்பு உயரும். ஆனால் இந்த திடீர் டிரெண்டிங்கில் வெகு சில நிறுவனங்கள் மட்டுமே வெற்றி பெறும், பல நிறுவனங்கள் தோல்வியடையும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் பெரும் மூலதனம் ஈர்க்கப்பட்ட நிறுவனங்கள் அதிகப்படியான மதிப்பீட்டை பெற்று சந்தையின் சுழற்சியின் தொடக்கத்தில் இருப்பதாக டேவிட் சாலமன் கூறுகிறார்.

ஆனால் தற்போது உருவாகும் ஏஐ தொழில்நுட்ப நிறுவனங்கள் எதிர்பார்க்கப்பட்ட லாபங்களை அளிக்காமல் போகலாம் என்று எச்சரித்தார். இதனால் அடுத்த 12-24 மாதங்களில், பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டால் வியப்பு அடைய தேவையில்லை, காரணம் இது வரலாற்று ரீதியாக நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.

தற்போது செய்யப்படும் பல முதலீடுகள் லாபம் அளிக்காமல் போகலாம், அப்போது முதலீட்டாளர்கள் பின்வாங்குவார்கள் இதனால் தற்போது விலை உயர்ந்த பங்குகள் அனைத்தும் பெரும் சரிவை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் டேவிட் சாலமன்.

ஏஐ தொழில்நுட்ப துறையில் தற்போதுள்ள உற்சாகம் என்பது risk-adjusted analysis விட அதிகம் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் டேவிட். இதேபோல் ஏஐ துறையில் தற்போது ஏற்பட்டு உள்ள வளர்ச்சியை bubble என்றும் குறிப்பிட தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்விலையில் பங்குச்சந்தை நிபுணர்கள் மற்றும் சாமானிய முதலீட்டாளர்கள், தற்போதைய உயர்வை கணக்கிட்டு, நீண்டகால முதலீட்டை திட்டமிடுவதில் கவனம் செலுத்துமாறு தமிழ் குட்ரிட்டன்ஸ் அறிவுறுத்துகிறது. இதேபோல் சந்தை சரிவுக்கு தயாரானால் மட்டுமே இத்தகைய புதிய டிரெண்டில் முதலீடு செய்யுங்கள். இல்லையெனில் Follow The Basics அடிப்படையில் உங்கள் முதலீட்டை மாற்றிவிடுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+