சீனாவில் கொரோனாவின் தாக்கம் என்பது பரவலாக இருந்து வந்தாலும், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் கொரோனா பரவல் அதிகரிக்கலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தினாலும், மறுபுறம் தேவையினை அதிகரிக்க வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் பல கமாடிட்டிகளின் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம். குறிப்பாக முக்கிய கமாடிட்டியான கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்க வழிவகுக்கலாம். இது பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
தேவை அதிகரிக்கும்
இது குறித்து கோல்ட்மேன் சாச்ஸ் அறிக்கையில், கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல முக்கிய கமாடிட்டிகளின் விலை அதிகரிக்கலாம். இது சீனாவின் தளர்வுக்கு பிறகு இத்தகைய அறிவிப்பினையும் கொடுத்துள்ளது.
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோரான சீனாவில் தற்போது கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு எரிபொருளுக்கான தேவையானது அதிகரிக்கும். சீனாவைத் தொடர்ந்து மற்ற உலக நாடுகளிலும் அதிகரிக்கும். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது உச்சத்தினை தொடலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் தேவை அதிகரிக்கும்?
கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் ரயில்கள், விமானங்கள், வாகன போக்குவரத்து என அனைத்தும் அதிகரிக்கலாம். தங்களது சேவையினை மீண்டும் தொடங்கலாம். இதன் காரணமாக கச்சா எண்ணெயில் மிகப்பெரிய அளவில் தேவை அதிகரிக்க கூடும். இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிற்துறை வளர்ச்சி அதிகரிக்கலாம்
கட்டுப்பாடுகள் குறைந்துள்ள நிலையில், பல மாதங்களாகவே முடங்கியிருந்த நிறுவனங்கள், உற்பத்தி ஆலைகள் என பலவும் மீண்டும் உற்பத்தியினை அதிகரிக்க முயலலாம். இதன் காரணமாக தேவை என்பது தொழிற்துறையிலும் அதிகரிக்க கூடும். இதுவும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.
விலை எதிர்பார்ப்பு
தொடர்ந்து தேவையானது அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் தேவையானது பேரலுக்கு மீண்டும் மூன்றாவது காலாண்டில் 110 டாலர்களை தொடலாம். இன்று wti கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 77.47 டாலர்களை தொடலாம். இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 82.73 டாலர்களாக உள்ளது.
தாக்கத்தினை ஏற்படுத்தலாம்
கச்சா எண்ணெய் விலையை மேற்கொண்டு ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யாவிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஷ்யாவின் பங்கினை குறைக்கும் விதமாக மேற்கத்திய நாடுகள், ஜி 7 நாடுகள் தடை விலை உச்ச வரம்பினை நிர்ணயம் செய்துள்ளதால், இது மேற்கொண்டு விலையில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும்.
காப்பர் நிலவரம் என்ன?
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பார்க்கும்போது முதல் முறையாக காப்பர் விலையானது, 9000 டாலர்களை தாண்டியுள்ளது. இது 2023 இறுதிக்குள் 11,500 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நீண்டகால நோக்கில் காப்பர் டன்னுக்கு 15000 டாலர்களை எட்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலை என்னவாகும்?
கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கும்பட்சத்தில் அது எரிபொருள்கள் விலையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்த கூடும் எனலாம். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலையானது ஏற்கனவே இந்தியாவில் உச்சத்தில் காணப்படுகின்றது. கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கும்பட்சத்தில், இது மேற்கொண்டு அதிகரிக்க வழிவகுக்கலாம்.


Click it and Unblock the Notifications