கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் தொடர்ந்து தேவை மீண்டு வருகிறது.
இந்த சமயத்தில் ஒபெக் நாடுகளும் தங்களது உற்பத்தியினை குறைவாக வைத்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விலையானது முன்பு நினைத்ததை விட, விரைவாக அதிகமாகவும் இருக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
அதோடு நுகர்வானது அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை ஜூலை மாதத்தில் எட்டும் என்றும் கூறியுள்ளனர்.
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு.. 4 மாநில அரசுகள் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் எப்போது..?!

ஆயில் விலை அதிகரிக்கும்
அதே சமயம் உற்பத்தியாளர்கள் மத்தியில் உற்பத்தியானது மீண்டும் உறுதியற்றதாகவே உள்ளது. இதனால் விலை மீண்டும் அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர். இதற்கிடையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது, பேரலுக்கு 10 டாலர்கள் அதிகரிக்கும் என்று கணித்துள்ளனர். இது அடுத்த காலாண்டில் 70 டாலர்களாகவும், அதனை தொடர்ந்த மூன்று மாதங்களில் 75 டாலர்களாகவும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தேவை அதிகரிக்கும்
தேவையானது அதிகரித்து வரும் இந்த நேரத்தில் உற்பத்தி குறைவாக உள்ளது. இது கடந்த பல மாதங்களாக நாட்டில் லாக்டவுன் நிலவிய சமயத்தில், பெரியதாக தாக்கம் இல்லை. எனினும் தற்போது தேவை மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், இது பற்றாக்குறையை உருவாக்கும். இதனால் விலை அதிகரிக்கவே செய்யும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உற்பத்தி குறைப்பு
சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் உற்பத்தியினை குறைத்த நிலையில், தற்போது உலகின் பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகின்றது. இது உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இது நடப்பு ஆண்டில் 22% அதிகமாகலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதோடு தற்போது உலகளவில் கையிருப்புகளும் குறைந்து கொண்டே வருகிறது. ஆக இதுவும் விலைக்கு சாதகமாக அமையும்.

சப்ளை குறையும்
அதோடு ஓபெக் + வட அமெரிக்காவுக்கு வெளியே உள்ள பெரும்பாலான உற்பத்தியாளர்களிடமும் உற்பத்தி அதிகரித்ததாக தெரியவில்லை. குறிப்பாக வரவிருக்கும் ஆண்டில் ஒரு நாளைக்கு 9 லட்சம் பேரல்கள் எண்ணெய் சப்ளை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் இதன் ஒட்டுமொத்த தாக்கமும் கச்சா எண்ணெய் விலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரம்
தற்போது டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 0.79% அதிகரித்து 59.73 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 0.85% அதிகரித்து, 62.67 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 92.68 ரூபாயாகவும், இதே டீசல் விலை 86.06 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பெட்ரோல் + டீசல் விலை
இந்தியாவினை பொறுத்தவரையில் எரிபொருளை அதிக அளவில் இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையின் தாக்கம் நேரடியாக இருக்கும். ஏற்கனவே கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையானது கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் பட்சத்தில், இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.