உலகின் முன்னணி தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ், கச்சா எண்ணெய் சந்தையில் பெரிய அளவிலான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. குறிப்பாக, அதிகரிக்கும் வர்த்தகப் பதட்டங்கள் மற்றும் உலகளாவிய எண்ணெய் விநியோகம் அதிகரிப்பு போன்ற காரணங்களால், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 40 டாலருக்கும் கீழே சரியக்கூடும் என்று இந்நிறுவனம் கணித்துள்ளது. இருப்பினும் இத்தகைய நிலை மிகவும் தீவிரமான காலகட்டத்தில் தான் நடக்கும் என்றும் கோல்ட்மேன் சாச்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் தற்போது ஒரு பேரல் 60 டாலருக்கு விற்கப்பட்டு வருகிறது, இதேவேளையில் அமெரிக்க வெனிசுலா கச்சா எண்ணெய்-ஐ அமெரிக்கா தவிர உலக நாடுகள் யாரும் வாங்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்க ஆலோசனை செய்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் சப்ளையிலும் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலருக்கு விற்கப்படும் வேளையில் இந்தியாவில் பெட்ரோல் விலை சராசரியாக 100-102 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இப்படியிருக்கையில் 40 டாலராகக் குறைந்தால் தற்போதைய கலால் வரி விதிப்பு முறையின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70-80 ரூபாய்க்கு விற்கப்படலாம்.
கச்சா எண்ணெய் விலை எவ்வளவு குறையலாம்? என்ற தலைப்பில் கோல்ட்மேன் சாச்ஸ் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில், பல்வேறு சூழ்நிலைகளை முன்வைத்து இந்த முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளது.
உதாரணமாக அமெரிக்கப் பொருளாதாரம் ரெசிஷனுக்குள் நுழைந்து, கச்சா எண்ணெய் விநியோகம் அடிப்படை அளவுகளைப் பூர்த்தி செய்தால் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 58 டாலராகவும், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 50 டாலராகும் இருக்கும் என்று கணித்துள்ளனர்.
இருப்பினும், அமெரிக்கா பொருளாதாரத்தில் ரெசிஷன் மிகவும் தீவிரமாகப் பாதிக்கும் சூழ்நிலை உருவானால், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி குறைந்து, OPEC+ நாடுகள் வருமானத்தை அதிகரிக்க இதுவரையில் அறிவிக்கப்பட்ட பல கட்ட உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகள் முழுமையாகத் திரும்பப் பெறப்பட்டால் விநியோகத்தை அதிகரிக்கும்.
இதனால் சந்தையில் தேவைக்கு அதிகமாக சப்ளை இருக்கும் இந்த சூழ்நிலையில், 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 40 டாலருக்கும் சற்று குறைவாகச் சரியக்கூடும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் மதிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வும் கணிப்பும் மாறுபட்ட பொருளாதார சூழ்நிலையை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுபவை, இதை ஏப்ரல் 7 ஆம் தேதி யூலியா க்ரிக்ஸ்பி உள்ளிட்ட ஆய்வாளர்கள் வெளியிட்டனர். ஆனால் இது கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் முதன்மை கணிப்பு அல்ல என்பதையும் இந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தை தற்போது வேகமாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த வாரம் ஒரு பேரல் 75 டாலரை நெருங்கியிருந்த நிலையில், தற்போது 60 டாலருக்கு அருகில் வந்துள்ளன. இதன் அடிப்படையில் நிலையான பொருளாதார வர்த்தக சூழ்நிலையில் கோல்ட்மேன் சாச்ஸ்-ன் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 55 டாலராக இருக்கும் எனக் கணித்துள்ளது.
ஆனால் அமெரிக்கப் பொருளாதார மந்தநிலை, வரி விதிப்புகள் எனக் கச்சா எண்ணெய் முதல் பங்குச்சந்தை வரையில் அனைத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

டீசல் விலை லிட்டருக்கு 22 ரூபாய் உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்..!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!



Click it and Unblock the Notifications