உலகளாவிய நிதி நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ், பல்வேறு வகையான நிதிச் சேவைகளை வழங்கி வருகின்றது. இது முதலீடு தொடங்கி பத்திர சேவை, பல்வேறு நிதி சம்பந்தமான ஆய்வுகள் என பலவற்றையும் செய்து வரும் நிறுவனமாகும்.
தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்த நிறுவனம், சில நூறு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
பணி நீக்க திட்டம்
சர்வதேச பொருளாதாரத்திலும் நிலையற்ற ஒரு நிலையே இருந்து வருகின்றது. இது மேற்கோண்டு இந்த நிறுவனத்தின் வளர்ச்சி சரிவுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் நுகர்வோர் சம்பந்தமான வணிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பணி நீக்கம் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிதிச் சேவை நிறுவனம் அதன் வங்கித் துறையில் 400 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது சில்லறை வங்கி துறையில் நஷ்டத்தினை கண்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கையினை திட்டமிட்டுள்ளது.
ஊழியர்கள் பணி நீக்கம்
கோல்ட் மேன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன், சமீபத்திய பணி நீக்கத்தில் செயல்திறன் குறைவான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
இதற்கிடையில் இதன் தலைமை செயல் அதிகாரி மற்ற வணிகங்களையும் மதிப்பாய்வு செய்யும் என தெரிவித்திருந்தார். இதன் மூலம் இன்னும் சில பிரிவிகளில் செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுக்கலாம் எனவும், இதில் பணி நீக்கமும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி சரியலாம்
இந்த சவாலான காலகட்டத்திலும் தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் கணிசமான செலவினை இந்த நிறுவனம் செய்துள்ளது. இதன் காரணமாக பெரும் அழுத்தத்தினை எதிர்கொண்டுள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக செலவினைக் குறைக்க நிறுவனம் பல்வேறு வகையாக நடவடிக்கையினை எடுத்து வருகின்றது.
இறுதி கட்ட திட்டம்
எனினும் கோல்ட்மேன் நிறுவனம் இந்த பணி நீக்கம் குறித்து எந்த அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தொடர்ந்து நிறுவனம் செலவு அதிகரிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும், இது இந்த காலகட்டத்தில் பெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பணி நீக்கம் குறித்தான திட்டமும் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வளர்ச்சி காணாத வணிகங்கள்
இந்த நிதி நிறுவனத்தில் 49000 ஊழியர்களை தாண்டியும் ஊழியர்கள் உள்ளனர். வரும் மாதங்களில் இந்த நிறுவனம் அதன் நுகர்வோர் வணிகத்தினை நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் வளர்ச்சி பாதையில் உள்ள சேமிப்பு கணக்குகள் குறித்தான வணிகத்தினை மேம்படுத்துவதில் நிறுவனம் உறுதியாக உள்ளது. வளர்ச்சி காணாத வணிகங்கள் குறித்து இந்த நிறுவனம் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
சேல்ஸ்போர்ஸ் பணி நீக்கம்
இதே போல மற்றொரு அமெரிக்க நிறுவனமான சேல்ஸ்போர்ஸ், மற்றுமொரு பணி நீக்க நடவடிக்கையினை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த நிறுவனத்தில் பற்பல மாற்றங்கள் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. புது நிர்வாகம் ஊழியர்களுக்கு புது இலக்குகளை நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் இந்த பணி நீக்கமானது உயர் மட்ட அதிகாரிகள் தரப்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications