அச்சச்சோ மீண்டும் பணி நீக்கமா.. இப்போ யாரெல்லாம் சிக்க போறாங்களோ.. கோல்ட்மேன் சாச்ஸ்!

முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை வழங்கும் நிறுவனமான கோல்ட்மேட் சாச்ஸ், நிறுவனம் ஜனவரியில் புதிய சுற்றுப் பணி நீக்கத்தினை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து இந்த முதலீட்டு வங்கியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் சாலமன் ஊழியர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஜனவரி மாதம் புதிய பணி நீக்க நடவடிக்கையினை எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் இது குறித்து கவனமாக ஆய்வு செய்து வருகிறோம். இன்னும் இது குறித்து விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. ஜனவரி பாதியில் இந்த பணி நீக்க நடவடிக்கையானது இருக்கலாம் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடினமான பாதை

கடினமான பாதை

தொடர்ந்து மானிட்டரி கொள்கைகள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில் அது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பல காரணிகளும் பணி நீக்கத்தின் முன்பு உள்ளது எனலாம்.
தொடர்ந்து வட்டி அதிகரிப்புக்கு மத்தியில் , வணிகத்தினை பாதிக்கும் பல்வேறு காரணிகள் சந்தையில் உள்ளன. இதற்கிடையில் தான் முதலீட்டு வங்கியானது அதன் கடினமான பாதையில் சென்று கொண்டுள்ளது எனலாம்.

கார்ப்பரேட் கடன் விகிதம் சரிவு

கார்ப்பரேட் கடன் விகிதம் சரிவு

குறிப்பாக மத்திய வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு தேவையானது இவ்வங்கி சரியத் தொடங்கியுள்ளது. இதனால் நிதி சம்பந்தமான விற்பனையானது பெரும் சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த 2022ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் கடந்த ஆண்டினை காட்டிலும் 57% சரிவினைக் கண்டுள்ளது. இதே கார்ப்பரேட் கடன் விகிதம் மூலம் கிடைக்கும் வருவாயும் 77% சரிவினைக் கண்டுள்ளது.

லாபம் சரிவு

லாபம் சரிவு

தொடர்ந்து வருவாய் மற்றும் லாபம் குறைந்திருந்தாலும், சுவாரஸ்யமாக வங்கியின் பணியாளர்கள் எண்ணிக்கை என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. இது தரவின் படி 2018ஐ காட்டிலும் 34% அதிகரித்து, 49,000 பேருக்கும் மேல் பணியில் உள்ளனர் எனலாம். இதுவும் நிறுவனத்தின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

 செலவு குறைப்பு நடவடிக்கை

செலவு குறைப்பு நடவடிக்கை

இதற்கிடையில் தான் நிறுவனம் செலவு குறைப்பு நடவடிக்கையினை கையில் எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிறுவனமும் நாங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். எங்கள் வளங்களை புத்தாலிசாலிதனமாக நிர்வகிக்க வேண்டும் ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பல நிறுவனங்களும் இப்படி தான்

பல நிறுவனங்களும் இப்படி தான்

கோல்டுமேன் நிறுவனம் மட்டும் அல்ல, மாரகன் ஸ்டான்லி கடந்த மாதம் 1600 பேரை பணி நீக்கம் செய்து செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்தது, இவை மட்டும் அல்ல டாய்ச் வங்கி, கிரெடிட் சூசி, பார்க்லேஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களும் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் பல்வேறு செலவு குறைப்பு நடவடிக்கையினை எடுத்துள்ளன. குறிப்பாக பற்பல நிறுவனங்களும் புதிய பணியமர்த்தலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

மீண்டும் தொடருமா?

மீண்டும் தொடருமா?

முன்னதாக கடந்த ஆண்டின் இறுதியில் பற்பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை செய்தன. குறிப்பாக மெட்டா நிறுவனம், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் நிறுவனம், சிஸ்கோ என பல நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையினை எடுத்தன. இந்த போக்கானது இந்த ஆண்டும் தொடருமா? என்ற அச்சம் இருந்து வரும் நிலையில், கோல்டுமேன் நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+