தொடர்ந்து சர்வதேச அளவில் பணவீக்கம் என்பது மோசமானதொரு பிரச்சனையாக இருந்து வரும் நிலையில், தொழிலாளர் சந்தையிலும் பின்னடைவாக இருந்து வருகின்றது. இதன் தாக்கம் நடப்பு ஆண்டிலும் அமெரிக்காவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்த ஆண்டிலும் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை மூன்று முறைக்கு மேல் அதிகரிக்கலாம் என கோல்ட்மேன் சாச்ஸ் கணித்துள்ளது.
ஒரு புறம் சந்தைக்கு சாதகமாக வேலையின்மை நலன் விகிதம் என்பது சந்தைக்கு சாதகமாக குறைந்துள்ளது. இது வேலை அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டுகின்றது. இது பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி வருவதை சுட்டிக் காட்டுகின்றது. 'அதேசமயம் உற்பத்தி விலைகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மீண்டும் பணவீக்கம் அதிகரிக்கலாம்
இது மேற்கொண்டு செலவினை கூட்டலாம். உற்பத்தி விலையினை அதிகரிக்கலாம். இதன் காரணமாக விலைவாசி மீண்டும் அதிகரிக்கலாம். இது மீண்டும் பணவீக்கம் அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு வட்டி விகிதம் அதிகரிக்க காரணமாக அமையலாம்.
வட்டி அதிகரிப்பு இருக்காதா?
மெதுவாக பணவீக்கம் என்பது சற்றே மென்மையடையத் தொடங்கியுள்ள நிலையில், வட்டி அதிகரிப்பு விகிதமும் சற்று குறைந்துள்ளது. இது முன்னதாக மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில், கடந்த முறை 25 அடிப்படை புள்ளிகள் மட்டுமே அதிகரித்தது. இனி வரவிருக்கும் அமர்வுகளில் வட்டி விகிதத்தின் பெரிய அதிகரிப்பு இருக்காது என நிபுணர்கள் எதிர்பார்த்தனர்.
சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்
ஆனால் தற்போது மீண்டும் வட்டி அதிகரிப்பானது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சர்வதேச அளவில் நிதி சந்தைகளில் இருந்து முதலீடு வெளியேற வழிவகுக்கலாம். குறிப்பாக இந்திய சந்தையில் இருந்தும் முதலீடுகள் வெளியேற வழி வகுக்கலாம். இது இந்திய சந்தையானது சரிவடைய வழிவகுக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய மத்திய வங்கியினையும் வட்டி அதிகரிப்பினை செய்ய வழிவகுக்கலாம். இது கடன் சந்தையிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
ஐரோப்பிய சந்தை
மொத்தத்தில் இந்தியாவிலும் இதன் தாக்கம் இருக்கலாம். அமெரிக்க சந்தையில்; வட்டி அதிகரிக்கும் பட்சத்தில், அது இந்தியா, ஐரோப்பிய சந்தைகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஐரோப்பிய சந்தையும் மார்ச் மாதத்தில் 4.75% - 5% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 25 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications