டெல்லி: 8வது சம்பள கமிஷன் மூலம் அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும் என்பது குறித்து சர்வதேச நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி 8வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தால் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 19000 வரை அதிகரிக்கலாம் என கோல்ட்மேன் சச்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டதிலிருந்து அது தொடர்பான ஒவ்வொரு அறிவிப்புகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தற்போதைக்கு அரசு 8வது சம்பள கமிஷனுக்கான அறிவிப்பை மட்டும் தான் வெளியிட்டு இருக்கிறது. அடுத்ததாக இந்த குழு உறுப்பினர்களை நியமனம் செய்யும் பணிகள் நடைபெறும். இதனை அடுத்து இந்த குழுவினர் பண வீக்கம், வாழ்க்கைச் செலவினங்கள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகை உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து அரசிடம் பரிந்துரையை வழங்குவார்கள்.
8வது சம்பள கமிஷனுக்கு பிறகு எவ்வளவு அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும் என்பது பற்றி கோல்ட்மேன் சச்ஸ் வெளியிட்டுள்ள கணிப்பில், சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு 19000 வரை உயரலாம் என கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுகிறது.
தற்போது அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய 8வது ஊதியக்குழு தன்னுடைய பரிந்துரையை வழங்குவதற்கு ஓராண்டுக்கு மேல் எடுத்துக் கொள்ளும் என சொல்லப்படுகிறது. எனவே இந்த பரிந்துரைகள் 2026 அல்லது 2027 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் ஒதுக்கீடுகளின் அடிப்படையில் சாத்தியமான ஊதிய உயர்வினை கோல்ட்மேன் சச்ஸ் கணித்துள்ளது. உதாரணமாக அரசாங்க பட்ஜெட் ஒதுக்கீடு 1.75 லட்சம் கோடியாக இருந்தால் தற்போது ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கக்கூடிய அரசு ஊழியர்களின் சம்பளம் 1,14, 600 ரூபாயாக உயரும். இந்த ஒதுக்கீடு 2 லட்சம் கோடியாக இருந்தால் சம்பளத் தொகை 1 லட்சம் ரூபாய் என்பது 1,16,700 ஆக உயரும், 2.25 லட்சம் கோடியாக பட்ஜெட் ஒதுக்கீடு இருந்தால் சராசரி சம்பளம் மாதத்திற்கு 1,18,800 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபிட்மண்ட் ஃபேக்டர் எனப்படும் ஊதியத்தை கணக்கிடுவதற்கான காரணி எந்த அளவு பயன்படுத்தப்படும் என்ற யூகங்கள் பரவிய வண்ணம் இருக்கின்றன. ஏழாவது சம்பள கமிஷன் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரை பயன்படுத்தியது.
2016 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த ஏழாவது சம்பள கமிஷன் மூலம் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 7000 ரூபாயில் இருந்து 18000 ரூபாயாக உயர்ந்தது. 8வது சம்பள கமிஷனிலும் 2.57 என்ற ஃபிட்மண்ட் ஃபேக்டரே பயன்படுத்த வேண்டும் என ஊழியர்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications