டெல்லி: குளோபல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனமான கோல்ட்மேன் சாச்ஸ் 3,000 பேருக்கும் மேலாக பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வணிக கூட்டம் என கூறி காலை 7.30 மணிக்கெல்லாம் அலுவலகம் வரக்கூறிய நிலையில், 3,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோல்ட்மேன் சாச்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் சாலமன், கடந்த வாரம் நியூயார்க் தலைமையகத்தில், வணிக கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்த நிலையில் போலியான வணிக கூட்டம் என நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தின் பணி நீக்கம் இருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்ப்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
மன்னித்து விடுங்கள் வேறு வழியில்லை
வணிக கூட்டம் என நினைத்து காலை 7.30 மணிக்கே கான்பரன்ஸ் அறைக்கு வந்த ஊழியர்கள், தங்களது மேலாளர்களால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக எங்களை மன்னித்து விடுங்கள். எங்களுக்கு வேறு வழியில்லை என கூறி வலுக்கட்டாயமாக பணி நீக்கமும் செய்தனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு Best of Luck என கூறி அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு
இதேபோல ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஊழியர்களையும் காலை 7.30 மணிக்கே, மற்றொரு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் மேற்கொண்டு பணி நீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
உடனடியாக வெளியேறலாம்
மற்ற பிராந்தியங்களில் உள்ள ஊழியர்கள் பெரும்பாலும் விடுமுறை நேரத்தில் இருப்பதால், இது குறித்தான தகவல்கள் எதுவும் ஊழியர்கள் முன் கூட்டியே அறிந்திருக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறவோ அல்லது சக ஊழியர்கள் வரும் வரையில் காத்திருக்கவோ வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
David's Demolition Day
இது குறித்து நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இது மிக கடினமான நேரம். எங்களின் அனைத்து ஊழியர்களின் பங்களிப்பு குறித்து நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்களுக்கு நாங்கள் எங்களின் ஆதரவை வழங்குகிறோம். கோல்ட்மேன் சாச்ஸ்-ன் இந்த பணி நீக்கமானது "David's Demolition Day" என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியர்களும் பாதிப்பு
சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பணி நீக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இருந்து வருகின்றது. இதனால் உலகளாவிய அளவில் இந்திய தொழிலாளர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சில ஐஐடி மற்றும் ஐஐஎம் பட்டதாரிகள் என பல்வேறு தரப்பினர் தங்களின் மோசமான நிலையை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதை பார்க்க முடிகிறது.
காரணிகள் எதுவும் மாறவில்லை
ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, சீனா தாய்வான் பதற்றம், பணவீக்கம், வட்டி அதிகரிப்பு, சீனாவில் கொரோனாவின் தாக்கம் என பல காரணிகளும் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக ரெசசன் அச்சம் நிலவி வருகின்றன. ஏற்கனவே சில நாடுகள் ரெசசனுக்குள் நுழைந்துள்ளன. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பணி நீக்கத்தினை அதிகரிக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications