இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகளைச் சிங்கப்பூர் கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனம் மொத்தமாக விற்பனை செய்துள்ளது. இதன் வாயிலாகவே இன்று டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் அதிகளவிலான வர்த்தகச் சரிவைச் சந்தித்துள்ளது.
கோல்மேன் சாச்ஸ் நிறுவனம் டிவிஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் 0.75 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இதை மொத்தமாக வெளிச் சந்தையில் சுமார் 148 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
இன்று காலை பங்குச்சந்தையில் வெளியான தரவுகளின் படி கோல்டுமேன் சாச்ஸ் நிறுவனம் சுமார் 35.5 லட்சம் பங்குகளை அதாவது டிவிஎஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளில் சுமார் 0.75 சதவீத பங்குகளைச் சராசரியாக 417.05 ரூபாய் விலையில் சுமார் 147.95 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகப் பல்க் டீல் விபரத்தில் தெரிவித்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை
கொரோனா பாதிப்பால் இந்தியாவின் ஆட்டோமொபைல் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் வாயிலாக ஜூன் காலாண்டில் நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மோசமான முடிவுகளை அறிவித்துள்ளது.
இதைத் தாண்டி இந்திய ஆட்டோமொபைல் துறையில் தற்போது பல்வேறு பிரச்சனைகள் உள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ்
2019-20ஆம் நிதியாண்டின் ஏப்ரல்- ஜூன் காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் 142 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பதிவு செய்த நிலையில், நடப்பு நிதியாண்டில் ஜூன் காலாண்டில் 139 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் அடைந்துள்ளது.
வருவாய்
இதோடு இந்நிறுவனத்தின் வருவாய் சுமார் 68 சதவீதம் வரையில் குறைந்து 1,434 கோடி ரூபாய் அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் டிவிஎஸ் மோட்டார்ஸ் 4,469 கோடி ரூபாய் அளவிலான வருவாயைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் சரிவு
கோல்டு மேன் சாச்ஸ் பங்கு விற்பனையின் எதிரொலியாக டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 3 வர்த்தக நாட்களாகச் சரிந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் டிவிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.51 சதவீதம் சரிந்து 416.50 ரூபாயாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications