கார் ஒர்க்ஷாப் மற்றும் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் பிளார்ட்பார்ம் ஆன கோ மெக்கானிக் சுமார் 70% பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து இணை நிறுவனர் அமித் பாசின் ஒரு லிங்க்ட் இன் பதிவில், கோ மெக்கானிக் கார் வாஷிங் சேவைகள் வரை அனைத்தையும் வழங்குகிறது.
இது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ சர்வீஸ் சென்டர் நெட்வொர்க்கை கொண்டுள்ளது. நிறுவனம் தற்போது புதிய அளவிலான நிதியினை திரட்ட முடியாமல் தவித்து வருகின்றது. இதன் காரணமாக பெரும் நிதி நெருக்கடியினை நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. இதற்கிடையில் தான் நிறுவனம் இத்தகைய முடிவினை எடுத்திருக்கலாம் என தெரிகின்றது.
மோசமான நிதி நிலை அறிக்கை
எல்லா செலவினங்களும் அதிகரித்த நிலையில், நாங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளோம். இதற்கிடையில் எங்களின் நிதி நிலை அறிக்கையானது மோசமாக வந்துள்ளது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம். தற்போதைய சூழ்நிலைக்கு நாங்கள் முழுமையாக பொறுப்பேற்கிறோம். மூலதனத்தினை திரட்டும் இந்த நிலையில், நாங்கள் நிறுவனத்தை மறுசீரமைக்கவும் முடிவு செய்துள்ளோம்.
வேதனையளிக்கலாம்
இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையானது அனைவருக்கும் வேதனையளிக்கலாம். துரதிஷ்டவசமாக சுமார் 70% பணியாளர்களை நாங்கள் குறைக்க வேண்டியிருக்கும் என அமித் பாசின் தெரிவித்துள்ளார்.
கோ மெக்கானிக் நிறுவனம் குருகிராமை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2016ல் தொடங்கப்பட்டது. குஷால் கர்வா மற்றும் அமித் பாசின் உள்ளிட்ட 4 நண்பர்களால் 2016ல் நிறுவப்பட்டது.
அமித் பாசின்?
சிறந்த கார் பழுதுபார்க்கும் ஒரு நிறுவனமாகும். இது அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டர்கள் மற்றும் உள்ளூர் பட்டறைகளுக்கும் இடையிலான ஒரு இடைவெளியினை குறைக்க 2016ல் கோமெக்கானிக்கை நிறுவினோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தினை வழங்க முடிந்தது.
முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்
இது தான் தொழில்நுட்பத்தின் மூலம் கார் சேவையை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுக்க முக்கிய காரணமாக அமைந்தது. இது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு, குறைந்த கட்டணத்தில் சேவையை வழங்கி வருகின்றது எனலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையினையும் பெற்றுள்ளது. இது பலரின் இதயத்தையும் வெல்ல கைகொடுத்தது.
இது தான் இலக்கு
ஆக அதிக எண்ணிக்கையிலான முதலீட்டாளர்களை பெறுவதே சிறந்த ஒரு ஆப்சன். இதன் மூலம் எங்களது வணிகத்தினை அதிவேகமாக விரைவுபடுத்தவும், விரிவாக்கம் செய்யவும் முடியும். சில நூறு வாடிக்கையாளர்களுடன் தொடங்கி, 7 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இன்று சேவை செய்து வருகின்றது.
மறுசீரமைப்பு நடவடிக்கை அவசியம்
ஒரு தொழில் முனைவோராக எங்கள் தவறுகளை அடையாளம் கண்டு, அதனை சரி செய்து வருகிறோம். ஆக தீர்வுகளை பூர்த்தி செய்ய ஒவ்வொரு வழியையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தற்போதைய நிலைக்கு முழுப்பொறுப்பையும் நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். ஆக நிறுவனத்தினை மீட்டெடுக்க மறுசீரமைப்பு என்பது கட்டாயம்.
நிதி மோசடிகள்
ஒரு புறம் போதிய நிதி திரட்ட முடியாது என்பதால் மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது முக்கிய காரணமாக இருந்தாலும், மறுபுறம் இந்த நிதி திரட்ட முடியாமைக்கு முக்கிய காரணம் நிதி சம்பந்தமான பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதனால் தான் நிறுவனம் இப்படி ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாகவும் தெரிகிறது. எது எப்படியோ 70% மேலானவர்களின் பணி கேள்விக்குறியாகியுள்ளது பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

16 வருஷமா பார்த்த வேலை இப்போ இல்ல.. ஒரே ஈமெயிலில் மாறி போன வாழ்க்கை.. கண்ணீர் சிந்தும் ஐடி ஊழியர்!!

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications