ஏர்டெல் 5ஜி விரிவாக்கம்.. உங்க சிட்டியும் லிஸ்டில் இருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மூலை முடுக்கெங்கிலும் இணையப் பயன்பாடானது அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் பல ஆண்டுகளாக 5ஜி சேவையினை இந்தியாவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பயனர்கள் தற்போது அதனால் பயனடைய தொடங்கியுள்ளனர்.

எனினும் தற்போது வரையில் குறிப்பிட்ட முக்கிய நகரங்களில் மட்டும் 5ஜி சேவையானது கிடைத்து வருகின்றது.

5ஜி -யால் தொழில்நுட்ப வளர்ச்சியானது மிகப்பெரிய அளவில் இருக்கும் என இத்துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 4ஜி-யினை காட்டிலும் பலமடங்கு வேகம் கொண்ட 5ஜி சேவையானது, தற்போது வரையில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மல்டிபேக்கர்-ன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன..? இதை எப்படி கண்டுபிடிப்பது..? மல்டிபேக்கர்-ன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன..? இதை எப்படி கண்டுபிடிப்பது..?

தாமதமாகலாம்

தாமதமாகலாம்

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது 5ஜி சேவையினை விரிவாக்கம் செய்து வருகின்றன. இது பயனர்களுக்கு நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஆரம்பத்தில் 5ஜி சேவையானது கிடைக்க சில காலம் ஆகலாம். அதற்கான கட்டமைப்பு பணிகள் செய்ய சில காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயனர்கள் எண்ணியதை விட வெகுவேகமாக 5ஜி தொழில்நுட்பமானது வளரத் தொடங்கியுள்ளது.

ஏர்டெல் விரிவாக்கம்

ஏர்டெல் விரிவாக்கம்

ஏற்கனவே 10 நகரங்களில் தனது 5ஜி சேவையினை வழங்கி வரும் ஏர்டெல் நிறுவனம், தற்போது குருகிராமிலும் கிடைக்கலாம். இது வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் இறுதிக்குள் கிடைக்கலாம் எனவும், அதற்காக செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குருகிராம் மட்டும் அல்ல மேற்கு வங்கத்திலும் கிடைக்கலாம் என தெரிவித்துள்ளது.

5ஜி சேவை

5ஜி சேவை

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் தான் தனது 5ஜி சேவையினை தொடங்கியது. தொடர்ந்து விரிவாக்கம் செய்து வரும் ஏர்டெல் நிறுவனம், அடுத்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

முக்கிய பகுதிகளில் விரிவாக்கம்

முக்கிய பகுதிகளில் விரிவாக்கம்

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த 5ஜி சேவையினை பெற தங்களது சிம் கார்டினை மாற்றாமல், அப்படியே பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

கடந்த மாதம் வரையில் 10 நகரங்களில் வழங்கப்பட்டு வந்த இந்த 5ஜி சேவையானது, தற்போது குருகிராமிலும் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று குருகிராமின் 13 முக்கிய பகுதிகளில் இந்த 5ஜி சேவையானது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகளில் சேவை?

எந்தெந்த பகுதிகளில் சேவை?

ஒவ்வொரு கட்டமாக ஒவ்வொரு பகுதிக்கும் நிறுவனம் தொடர்ந்து 5ஜி கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றது.

தற்போது டிஎல்எஃப் சைபர் ஹப், டிஎல்எஃப் கட்டம் 2, எம்ஜி ரோடு, ராஜீவ் செளக், இஃப்கோ செளக், அட்லஸ் செளக், உத்யோக் விஹார், நிர்வானா நாடு, குருகிராம் ரயில் நிலையம், சிவில் லைன்ஸ், அர்டி சிட்டி, ஹூடா சிட்டி சென்டர், குருகிராம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் சில தேர்தெடுக்கப்பட்ட இடங்களில் இந்த சேவை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன பலன்?

என்ன பலன்?

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வேகமான இணைய சேவையினை பெறலாம். இது 4ஜி சேவையினை 20 - 30 மடங்கு வேகமாக இருக்கலாம். இது வீடியோ ஸ்ட்ரீமிங்-கினை வேகமாக்க உதவும். கேமிங், மல்டிபிள் சாட்டிங், போட்டோகளை உடனடியாக அப்லோடிங் செய்தல் என பலவற்றையும் வேகமாக பெற முடியும்.

ஏற்கனவே சேவைகள்?

ஏற்கனவே சேவைகள்?

ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே டெல்லி, மும்பை, வாராணி, சென்னை, ஹைத்ராபாத், நாக்பூர், சிலிகுரி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில், ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையினை வழங்கி வருகின்றது. வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையினை ஏற்கனவே உள்ள டேட்டா திட்டங்கள் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: airtel ஏர்டெல்
English summary

good news! Airtel expands 5G services in these cities: Is your city on the list?

Airtel has now expanded its 5G service in 13 areas of Gurugram
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X