ஜனவரி மாதம் முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கி விடுமுறைகள். வங்கி வாடிக்கையாளார்கள் அலர்ட்டாக இருக்க வேண்டிய நாட்கள் எவை? வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாக வங்கி விடுமுறைகளை தெரிந்து வைத்து கொண்டால், உங்களால் சரியான நேரத்தில் முன் கூட்டியே உங்களது வங்கி சேவையினை திட்டமிட்டு செய்து கொள்ள முடியும். ஆக வரவிருக்கும் பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை? குறிப்பாக தமிழ் நாட்டில் எத்தனை நாட்டில் எத்தனை நாட்கள் வாருங்கள் பார்க்கலாம்.
எத்தனை நாட்கள் விடுமுறை?
பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 9 நாட்கள் விடுமுறையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது வார விடுமுறைகளாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளையும் சேர்த்து தான்.
பிப்ரவரி மாதத்தில் வங்கி விடுமுறை
மேற்கண்ட விடுமுறைகளில் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம் என்பதால் அதனையும் சரியாக தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
பிப்ரவரி 5 - ஞாயிற்று கிழமை
பிப்ரவரி 11 - இரண்டாவது சனிக்கிழமை
பிப்ரவரி 12 - ஞாயிற்றுகிழமை
பிப்ரவரி 15 - லுய்-ங்காய் - நி காரணமாக இம்பாலில் விடுமுறை -
பிப்ரவரி 18 - அகமதாபாத், பெலாப்பூர், பெங்களூரு, போபால், புபனேஷ்வர், டோராடூன், ஹைத்ராபாத், (ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா), ஜம்மு காஷ்மீர், கான் பூர். கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், ரெய்ப்பூர், ராஞ்சி, சிம்லா, ஸ்ரீ நகர், திருவனந்தபுரம் - மகாசிவராத்திரி
பிப்ரவரி 20 - ஐஸ்வாலில் மாநில நாள் காரணமாக விடுமுறை
பிப்ரவரி 21 - லூசார் (சிக்கிம்) விடுமுறை
பிப்ரவரி 25 - 4வது சனிக்கிழமை
பிப்ரவரி 26 - ஞாயிற்று கிழமை
தமிழகத்தில் விடுமுறை?
தமிழ் நாட்டில் வார விடுமுறை தவிர மற்ற விடுமுறை நாட்கள் எதுவும் இல்லை எனலாம். ஆக தமிழக வாடிக்கையாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதே மற்ற மாநிலங்களில் இருப்பவர்கள் இதனை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
போராட்டம் ரத்து?
இம்மாத இறுதியில் வங்கி ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனவரி 30, 31 தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடத்த வங்கி ஊழியர் சங்கங்கள் திட்டமிட்டிருந்தன.
எனினும் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இத்தகைய சூழலுக்கு மத்தியில் இந்திய வங்கிகள் சங்கம் பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டதால் இது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications