ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஓய்வு பெறும் உறுப்பினர்களின் PF தொகைக்கு திருத்தப்பட்ட வட்டி விகிதம் ஏற்கனவே செலுத்தப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. அதாவது, ஓய்வு பெறும் EPFO உறுப்பினர்கள் தங்கள் PF தொகையுடன் மே 31-ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட திருத்தப்பட்ட வட்டியையும் சேர்த்து பெற்று வருகின்றனர். தற்போது EPF உறுப்பினர்களுக்கான வட்டி விகிதம் 8.25 சதவீதமாக உள்ளது.
2023 முதல் 2024-ஆம் நிதியாண்டுக்கான EPF வட்டி விகிதம் என்ன?: 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டிற்கான EPF உறுப்பினர்களுக்கான வட்டி விகிதத்தை 8.25 சதவீதம் என்று EPFO அமைப்பு அறிவித்துள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டு அடிப்படையில் வட்டி விகிதங்கள் அறிவிக்கப்படுகிறது.

அனால், EPF உறுப்பினர்களின் வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் வெளியிடப்படுவதில்லை. வருடாந்தர வட்டி விகிதமாக அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிதியாண்டின் முதல் காலாண்டில் வட்டி அறிவிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை EPFO அமைப்பு மே 31-ஆம் தேதி அன்று அறிவித்தது.
எப்போது வட்டி கிடைக்கும்? தற்போது பணியில் இருக்கும் EPFO உறுப்பினர்களுக்கு, 2023 முதல் 2024-ஆம் நிதி ஆண்டிற்கான வட்டி எப்போது கிடைக்கும் என்பது குறித்து EPFO அமைப்பு இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. பல உறுப்பினர்கள் தங்கள் EPF கணக்கில் எப்போது வட்டி வரவு வைக்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனால் ஓய்வுபெறும் ஊழியரக்ளுக்கு PF தொகையுடன் திருத்தப்பட்டு வட்டி விகிதங்கள் சேர்த்து வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPF பேலன்ஸ்-ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்?:
EPF கணக்கு இருக்கும், ஒரு ஊழியர் பின்வரும் 4 வழிகளைப் பயன்படுத்தி பேலன்ஸ் விவரங்களைச் சரிபார்க்கலாம்.
1) உமாங் (UMANG) அப்ளிகேஷன் மூலம் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
2) EPF உறுப்பினர் இ-சேவா போர்ட்டலைப் பார்வையிடுவதன் மூலம் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
3) மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
4) SMS அனுப்புவதன் மூலம் பேலன்ஸ் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
UMANG அப்ளிகேஷன் மூலம் EPF பேலன்ஸ் விவரங்களை எவ்வாறு தெரிந்துகொள்வது?:
ஸ்டெப் 1: உமாங் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும்.
ஸ்டெப் 2: உங்கள் மொபைல் எண்ணிலிருந்து பதிவு செய்யவும்.
ஸ்டெப் 3: கொடுக்கப்பட்டிருக்கும் விருப்பங்களில் இருந்து "EPFO" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
ஸ்டெப் 4: "View Passbook" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 5: உங்கள் UAN-ஐ என்டர் செய்த பிறகு, "Get OTP" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 6: "Login" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் பாஸ்புக் மற்றும் EPF பேலன்ஸ் திரையில் காட்டப்படும்.


Click it and Unblock the Notifications