ஊழியர்களுக்கு தீபாவளிக்கு போனஸா.. EPFO-வின் அந்த சூப்பர் வரப்போகிறதா..!

ஊழியர்களுக்கு இந்த தீபாவளிக்கு ஒரு சர்பிரைஸ் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

அது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உள்ள 6 கோடி பேருக்கும் மேலான ஊழியர்களுக்கு, விரைவில் 8.5% வட்டி விகிதம் கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வரவிருக்கும் விழாக்கால பருவத்தினை ஊக்குவிக்கும் பொருட்டு இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வட்டி விகிதமானது கடந்த ஜூலை மாதமே கிடைக்கலாம் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், இதுவரையில் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இது குறித்த அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஊழியர்களுக்கு கவலை வேண்டாம்

ஊழியர்களுக்கு கவலை வேண்டாம்

சமீபத்தில் ட்விட்டரில் பயனர் ஒருவருவருக்கு பதிலளித்துள்ள EPFO அமைப்பு, EPFO கணக்கில் வட்டி பணம் வரவு வைக்கப்படும்போது மொத்தமாக ஒரே நேரத்தில் டெபாசிட் செய்யப்படும். இதனால் யாருக்கும் வட்டி இழப்பு என்பது இருக்காது. ஆக ஊழியர்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.

லட்சக்கணக்கானோருக்கு பயன்

லட்சக்கணக்கானோருக்கு பயன்

எனினும் இந்த வட்டி தொகையானது எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்தான எந்த தகவலும் கூறப்படவில்லை. எனினும் இந்த வட்டி விகிதம் வரவிருக்கும் தீபாவளிக்கு முன்னதாக கிரெடிட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அனுமதி கிடைக்கலாம்

விரைவில் அனுமதி கிடைக்கலாம்

கொரோனா காரணமாக சம்பள குறைப்பு, சம்பள இழப்பு, வேலை இழப்பினை சந்தித்த ஊழியர்களுக்கு, இது ஆறுதலை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO அமைப்பு இந்த வட்டி விகிதத்திற்கு அனுமதி கொடுத்துள்ள நிலையில், நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டுள்ளது. இதற்காக விரைவில் அனுமதி கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வட்டி கிரெடிட் ஆகலாம்

விரைவில் வட்டி கிரெடிட் ஆகலாம்

கடந்த 2020-21 ஆம் நிதியாண்டின் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியின் (EPF) வட்டி விகிதம் மாற்றம் செய்யப்படாமல், முந்தைய ஆண்டினை போலவே 8.5% ஆகவே தொடர்ந்து வருகின்றது. ஆக இந்த வட்டி விகிதம் ஊழியர்களின் வைப்பு நிதி கணக்கில் விரைவில் கிரெடிட் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

EPFO-வின் வருமானம்

EPFO-வின் வருமானம்

EPFO அமைப்பு கடந்த 2021ம் நிதியாண்டிற்கான 8.5% வட்டி விகிதத்தினை செலுத்த பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில் முந்தைய நிதியாண்டில் EPFO அமைப்பு 70,300 கோடி ரூபாய் வருமானத்தினை ஈட்டியுள்ளது, அதனுடன் அதன் பங்கு முதலீடுகளின் ஒரு பகுதியினை விற்று, அதன் மூலம் 4,000 கோடி ரூபாய்வருவாய் ஈட்டியுள்ளது.

இந்திய பங்கு சந்தைகள் ஏற்றம்

இந்திய பங்கு சந்தைகள் ஏற்றம்

கடந்த EPFO கூட்டத்திற்கு பிறகு இந்திய சந்தையானது தொடர்ந்து வரலாற்று உச்சத்தினை தொட்டு வருகின்றது. இது நல்ல வருமானத்தினை கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 4, 2021 வாக்கில் சென்செக்ஸ் 51,000 என்ற லெவலில் இருந்த நிலையில், தற்போது 58,000 புள்ளிகளுக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

பல லட்சம் பேர் பலன்

பல லட்சம் பேர் பலன்

நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் EPF கொண்டுள்ளது. ஆக வட்டி குறித்தான அறிவிப்பினால் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பயன் அடைவார்கள் எனலாம். உண்மையில் இது ஒரு நல்ல விஷயமே. ஆக தீபாவளிக்குள் ஒரு இனிப்பான செய்தி காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

இருப்பை எப்படி தெரிந்து கொள்வது?

இருப்பை எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கிலுள்ள இருப்பை, உமாங் ஆப் (Umang App) மூலமும் தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது EPFOவின் உறுப்பினர் சேவா போர்டல் மூலமும், எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் அறிந்து கொள்ள முடியும். இதனை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பதை https://tamil.goodreturns.in/news/epfo-may-credit-8-5-epf-interest-soon-how-to-check-balance-check-full-details-here-024694.html என்ற கட்டுரையில் விரிவாக பார்த்துள்ளோம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+