இந்திய ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு புத்தாண்டு பரிசு தந்திருக்கிறது. வங்கிகளில் வீட்டு கடன், வாகன வாங்கிய அனைவருக்கும் அவர்கள் செலுத்தும் வட்டி விகிதம் குறைய போகிறது.
இந்திய இந்த ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் மும்பையில் நேற்று முன் தினம் தொடங்கியது. நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம், பணவீக்க விகிதம் , பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையிலான அதிகாரிகள் விரிவாக ஆலோசனை செய்தனர் .

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா 10 மணிக்கு வெளியிட்டார். அப்போது ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைப்பதாக கூறினார். இதன்படி 5.50 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது .
ரெப்போ வட்டி என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டிவிகிதம். ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை குறைத்திருப்பதால் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கிய கடன்களுக்கான வட்டியை குறைக்கும். எனவே வீட்டு கடன், வாகன கடன், தங்க நகை கடன் வாங்கிய அனைவருக்கும் வட்டி விகிதம் குறைய போகிறது. அதாவது மாதம் தோறும் செலுத்த கூடிய ஈஎம்ஐ குறைய போகிறது.
உதாரணமாக 50 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கிய நபர் 20 ஆண்டுகள் கடன் செலுத்தும் காலம் என்றால் 8.50% வட்டியில் மாதம் 43,391 ரூபாயை ஈஎம்ஐ-ஆக செலுத்துவார். இதுவே தற்போது வட்டி குறைந்து 8.25% என மாறுகிறது எனும் போது மாதாந்திர ஈஎம்ஐ தொகை 42,603 ரூபாயாக குறையும். மாதம் தோறும் ஈஎம்ஐ தொகையில் 788 ரூபாய் சேமிக்க முடியும்.
வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் மாதாந்திர ஈஎம்ஐ குறைப்பு அல்லது ஒட்டு மொத்த கடன் செலுத்தும் காலத்தை குறைப்பது என இரண்டில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். வழக்கமாக மாதாந்திர ஈஎம்ஐ தொகையை குறைக்காமல் கடன் செலுத்தும் காலத்தை குறைக்க வேண்டும் என்று தான் நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இது ஒட்டு மொத்தமாகவே பெரிய அளவில் வட்டியில் சேமிப்பை கொடுக்கும் என கூறுகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் ரிசர்வ் வங்கி இதுவரை 1.25% வரை ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து இருக்கிறது. பிப்ரவரி, ஏப்ரல், ஜூன் ஆகிய மாதங்களில் ரெப்போ வட்டி விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்தது. கடந்த ஆகஸ்ட் மற்றும் அக்டோபரில் வட்டியை குறைக்காமல் நியூட்டிரல் நிலையிலேயே வைத்தது. தற்போது 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications