இது ஹாப்பி நியூஸ்.. கிரெடிட் கார்டுகளுக்கும் வட்டி தள்ளுபடி திட்டம் பொருந்தும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா காலத்தில், மக்களுக்கு சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, ஆறு மாத காலம் இஎம்ஐ விகிதத்திற்கு அவகாசம் அளிக்கப்பட்டது.

 

அதனை இன்னும் மெருகேற்றும் விதமாக 2 கோடி ரூபாய் வரையிலான கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்யப்படாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், வாகனக்கடன் வாங்கியவர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கிய கடன் இப்படி ஏராளமானோரும் பயன்பெற்றுள்ளனர். கிரெடிட் கார்டுகளுக்கும் இந்த திட்டம் பொருந்துமா? என்ற கேள்வி எழுந்தது.

கிரெடிட் கார்டு கடனுக்கும் வட்டி சலுகை உண்டு

கிரெடிட் கார்டு கடனுக்கும் வட்டி சலுகை உண்டு

நிச்சயம் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்கிறது இந்த அறிக்கை. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகைக்கான வட்டிகான சலுகையும் இதில் அடங்கும். கடன் சலுகை திட்டத்தினை, அதாவது கால அவகாசத்தினை நீங்கள் பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும், (loan moratorium) அனைவருக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தின் மூலம் அரசுக்கு சுமார் 6,500 நிதி பிரச்சனை ஏற்படலாம் என்கிறது ஒர் அறிக்கை.

சராசரி வட்டி விகிதம்

சராசரி வட்டி விகிதம்

கிரெடிட் கார்டு நிலுவை தொகையை கடந்த மார்ச் முதம் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான காலகட்டத்திற்கு, உங்களது இஎம்ஐ அடிப்படையில் நிதி பரிவர்த்தனைகளுக்கான சராசரி வட்டி விகிதத்தின் (WALR) அடிப்படையில் வாடிக்கையாளரிடம் இருந்து வட்டி வசூலிக்கப்படும். இந்த WALR விகிதம் தணிக்கையாளர் அல்லது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிடும்.

கடனை திரும்ப செலுத்தியவர்களுக்கு
 

கடனை திரும்ப செலுத்தியவர்களுக்கு

கிரெடிட் கார்டு உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் பிப்ரவரி 29, 2020 வரை நிலுவைத் தொகையில் வட்டி கணக்கிடப்படும். இதே இந்த மாதத்திற்குள் செலுத்தப்பட்ட கடன்களுக்கு, அந்த 6 மாத காலத்திற்கான எளிய வட்டி மற்றும் கூட்டு வட்டிக்கு இடையேயான வித்தியாசத்தினை வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியோருக்கு திருப்பி செலுத்தி விடவேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடன் வழங்கும் நிறுவனம் ஒட்டிமொத்த வட்டி மற்றும் கடன் கணக்கில் எளிய வட்டி ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தினைத் தான் வாடிக்கையாளர்களுக்கு திரும்ப அளிக்கும்.

சலுகை கிடையாது

சலுகை கிடையாது

இந்த பணத்தினை வாடிக்கையாளர்களுக்கு திரும்ப செலுத்திய பின்னர், கடன் வழங்கிய நிறுவனங்கள், மத்திய அரசிடம் இழப்பீடாக கோரும். வட்டி தள்ளுபடி செய்ய நவம்பர் 5ம் தேதி காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் 2 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு இந்த சலுகை கிடையாது. அதோடு பிப்ரவரி வரை தவறாமல் கடன் தொகையை செலுத்தியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.

குறைந்தபட்ச தொகை செலுத்த வேண்டும்

குறைந்தபட்ச தொகை செலுத்த வேண்டும்

ஒரு வேளை நீங்கள் உரிய தேதியில் பணத்தினை செலுத்தவில்லை எனில், குறைந்தபட்ச கட்டணத்தினையாவது செலுத்த வேண்டும், அப்படி செலுத்தவில்லை எனில், நீங்கள் கணிசமான வட்டி + அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகையினை முழுமையாக பெற முடியாது. நீங்கள் உடனடியாக முழு தொகையை செலுத்த முடியவில்லை என்றால், குறைந்தபட்ச தொகையையாவது செலுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Good news for credit card holders as interest waiver plan

Govt announced waiver of interest on interest for loans up to Rs.2 crore irrespective of whether moratorium was availed or not. The scheme can be availed by borrowers in specified loan accounts, including credit card dues.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X