சென்னை: சம்பளத்திற்காக வேலை செய்யும் இந்தியர்களின் ஓய்வூ காலத்திற்கான ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகத்தான் epfo திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணி செய்யும் நிறுவனம் சார்பாக மாதம் தோறும் ஒரு கணிசமான தொகை பங்களிப்பு செய்யப்படும். இவ்வாறு பங்களிப்பு செய்யப்படும் தொகைக்கு அரசு சார்பாக ஆண்டுதோறும் ஒரு கணிசமான வட்டி வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட ஊழியர் ஓய்வு பெறும்போது இந்த இபிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இது தவிர பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர் தங்களுடைய அவசர தேவைகள், மருத்துவ செலவினங்கள் உள்ளிட்டவற்றுக்கு முன்கூட்டியே தங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். தற்போது அதில் பெரிய மாற்றத்தை கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஆட்டோ செட்டில்மென்ட் வரம்பை அதிகரித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க ஆட்டோ செட்டில்மெண்ட் (auto settlement) முறை இருக்கிறது. இதற்கு நாம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து நம் கணக்கில் இருக்கும் பணத்தை பெறலாம். கொரோனா காலத்தில் இதன் வரம்பு அதிகபட்சம் 1லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டது. அதே போல Non auto settlement முறை என ஒன்று இருக்கிறது. 1லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கோரினால் இந்த முறையில் நாம் பிஎஃப் அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சில நாட்கள் நாம் அலைய வேண்டி இருக்கும்.
இந்நிலையில் தான் ஆட்டோ செட்டில்மெண்ட் வரம்பு 1 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது என அமைச்சர் அறிவித்துள்ளார். அவசர காலங்களில் தங்களுடைய பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை விரைவாக எடுத்து பயன்படுத்தும் வகையில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என இபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். அதனை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆட்டோ செட்டில்மென்ட் முறையில் சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தாலே போதும், இதற்காக அலுவலகம் செல்ல வேண்டும் நேரடி சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. எனவே ஆட்டோ செட்டில்மெண்டில் பணம் எடுப்பது சந்தாதாரர்களுக்கு எளிமையாக உள்ளது. தற்போது இந்த வரம்பு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பது ஊதியதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே பி எஃப் சந்தாதாரர்கள் தங்களுடைய கணக்கில் இருக்கும் பணத்தை ஆட்டோ செட்டில்மெண்ட் முறையில் இனி ஐந்து லட்சம் ரூபாய் வரை எடுக்க முடியும். இதுபோல பணம் தேவை என கோரிக்கை வைக்கக்கூடிய நபர்களுக்கு அவர்களின் இந்த ஆட்டோ கிளைம் நடைமுறை மூன்று நாட்களுக்குள் முடிக்கப்பட்டு பணம் அவர்களின் கணக்கில் வந்து சேரும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டியா தெரிவித்து இருக்கிறார்.
2024 -25ஆம் ஆண்டில் ஆட்டோ செட்டில்மெண்டில் இபிஎஃப்ஓ 2.34 கோரிக்கைகளை பெற்று செயல்படுத்தி இருக்கிறது. இது 2023-24ஆம் ஆண்டில் 89 லட்சமாகவே இருந்தது. அதாவ்து ஓராண்டிலேயே ஆட்டோ செட்டில்மெண்ட் பயன்படுத்தி பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் விகிதம் 161 சதவீதம் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications