இந்தியாவில் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை துவங்கியுள்ள நிலையில் ஸ்மார்ட்போனில் துவங்கி பைக், கார், ரியல் எஸ்டேட் வரையில் அனைத்து துறையிலும் அதிகப்படியான தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்திய வங்கிகளில் இந்த வருடம் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் பொருட்களுக்கான கடன் சேவையை மிகப்பெரிய அளவில் அறிவித்து இருந்தாலும், வீட்டு கடன் வர்த்தகத்தை தான் பெரிதும் நம்பியுள்ளது.
மக்களுக்கும் சரி வங்கிகளுக்கும் சரி பாதுகாப்பான முதலீட்டு மற்றும் வர்த்தகம் என்றால் தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் தான். இந்நிலையில் பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை பெற வேண்டும் என்பதற்காக பாங்க் ஆஃப் பரோடா வங்கி வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்துள்ளது.
பொதுத்துறை வங்கி
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா இந்த பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தை வீட்டுக் கடன் பிரிவில் பெற வேண்டும் என்பதற்காக சக போட்டி நிறுவனங்களை விடவும் குறைவான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா
இன்று வெளியான அறிவிப்பில் பாங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடனுக்கான வட்டியை தற்போது நடைமுறையில் இருக்கும் 6.75 சதவீத வட்டி விகிதத்தில் இருந்து 0.25 சதவீதத்தை குறைத்து 6.50 சதவீதம் வரையில் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலேயே மிக குறைவான வட்டியில் வீட்டுக்கடனை அளிக்கிறது பாங்க் ஆஃப் பரோடா
வட்டி குறைப்பு
இது மட்டும் அல்லாமல் இந்த வட்டி குறைப்பு எவ்விதமான தாமதமுமின்றி மக்களுக்கு சென்று அடைய வேண்டும் என்பதற்காக அக்டோபர் 7ஆம் தேதி முதலே பாங்க் ஆஃப் பரோடா நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
டிசம்பர் 31 வரை
இப்புதிய குறைக்கப்பட்ட வட்டி விகிதம் டிசம்பர் 31 வரையில் நடைமுறையில் இருக்கும் என பாங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளதால் மக்கள் மலிவான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனை பெறலாம்.
6.25 சதவீத வட்டி விகிதம்
மேலும் இந்த 6.25 சதவீத வட்டி விகிதம் என்பது புதிய வீட்டுக் கடனுக்கு மட்டும் அல்லாமல், பிற வங்கியில் இருந்து கடனை மற்றுவோருக்கும், மறு கடன் பெறுவோருக்கும் இதே வட்டியில் கடன் அளிப்பதாக பாங்க் ஆஃப் பரோடா அறிவித்துள்ளது.
பிராசசிங் கட்டணம்
இவை அனைத்திற்கும் மேலாக அனைத்து வீட்டுக் கடனுக்கு பிராசசிங் கட்டணத்தை ஏற்கனவே ரத்து செய்துள்ள நிலையில் டிசம்பர் 31 வரையில் இந்த சலுகையும் தொடரும் என அறிவித்துள்ளது.
வீட்டுக் கடன் வட்டி
பாங்க் ஆஃப் பரோடா மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைத்து முன்னணி வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான வட்டியை அதிகளவில் குறைத்துள்ளது, இதனால் சொந்த வீட்டை வாங்க நினைப்போர் அனைவருக்கும் இதை விட்டால் நல்ல வாய்ப்பு மீண்டும் கிடைக்காது. எனவே தீபாவளி பண்டிகையின் போது மகிழ்ச்சியை மட்டும் அல்லாமல் வீட்டையும் சொந்தமாக்குங்கள்.
பிற முக்கிய வங்கி வட்டி விகிதம்
கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 6.50 சதவீதம், சிட்டி வங்கியில் 6.75 சதவீதம், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 6.80 சதவீதம்,
பேங்க் ஆஃப் பரோடாவில் 6.50 சதவீதம், சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 6.85 சதவீதம், பேங்க் ஆஃப் இந்தியாவில் 6.85 சதவீதம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 6.75 சதவீதம், ஹெச்டிஎப்சி-யில் 6.70 சதவீதம், ஐசிஐசிஐ வங்கியில் 6.90 சதவீதம், எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ்-ல் 6.90 சதவீதம், ஆக்சிஸ் வங்கியில் 6.90 சதவீதம், கனரா வங்கியில் 6.90 சதவீதம்.


Click it and Unblock the Notifications