இந்திய பொருளாதாரத்தை இயக்கும் லாரி மற்றும் கனரக வாகன உரிமையாளர்களுக்கு பலன் அளிக்கும் முக்கியமான விஷயத்தை இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஒருப்பக்கம் மத்திய அரசு கனரக வாகனங்களை மாற்று எரிபொருளில் இயக்கும் முக்கியமான முயற்சியில் இறங்கியுள்ள வேளையில் உடனடியாக பலன் அளிக்கும் குறிப்பாக பணத்தை சேமிக்கும் விஷயத்தை முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரீடைல் எரிபொருள் விற்பனை பிரிவான ரிலையன்ஸ் பெட்ரோலியம், பிரிட்டன் BP உடன் கூட்டணி உருவாக்கி தற்போது ஜியோ - BP பெயரில் இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல்-ஐ ரீடைல் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இப்புதிய கூட்டணி பல மாற்றங்களை செய்து வரும் வேளையில் தற்போது புதியாக ஒரு டீசல் வகையை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ஜியோ BP, ஆக்டிவ் தொழில்நுட்பத்துடன் கூடிய புரட்சிகரமான டீசலை அறிமுகப்படுத்தியுள்ளது, இது எரிபொருள் செலவுகளை குறைப்பது மட்டும் அல்லாமல் லாரிகளின் பராமரிப்பு செலவைக் குறைப்பதற்கும் உறுதியளிக்கிறது.
இதுக்குறித்து ஜியோ - BP வெளியிட்ட அறிக்கையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ள additivised diesel இந்தியா முழுவதும் தங்களுடைய ரீடைல் விற்பனையகங்களில் கிடைப்பதாகவும், இந்த புதிய டீசல்-ஐ லாரிகளில் பயன்படுத்துவது மூலம் வாகனங்களின் எரிபொருள் செலவுகள் வருடத்திற்கு 1.1 லட்சம் ரூபாய் வரையில் குறையும் எனவும், Fuel economy அதாவது மைலேஜ் 4.3 சதவீதம் வரையில் உயரும் என தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிமுகம் செய்துள்ள புதிய டீசல் வகை இந்திய வாகனங்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய சாலைகள், இந்திய வாகன பயன்பாட்டு முறை ஆகியவை உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மாறுப்படும்.
இதனால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இன்ஜின் வடிவமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்து தான் வெளிநாட்டு வாகனங்களை அறிமுகம் செய்யப்படுகிறது. இதேபோல் தற்போது எரிபொருள்-ம் இந்திய வாகனங்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு அறிமுகம் செய்துள்ளது முகேஷ் அம்பானி-யின் ஜியோ - BP.
மேம்பட்ட additivised diesel-ஐ பயன்படுத்துவதன் மூலம், எரிபொருள் அழுக்குகளை உருவாக்குவதற்கு எதிராக தீவிரமாகப் போராடுகிறது, குறிப்பாக fuel injectors அழுக்குகளை சேர்ப்பதை தடுக்கிறது. இந்த அழுக்குள் வாகனத்தின் இன்ஜின் செயல்திறன் மற்றும் எரிபொருள் செயல்திறனை கணிசமாக பாதிக்கும் நிலையில், இதை ஜியோ - BP மேம்பட்ட additivised diesel சரி செய்கிறது.


Click it and Unblock the Notifications