சொந்த வீடு வாங்குவது என்பது இன்றைய காலக்கட்டத்தில் மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருக்கிறது, ஆனால் வீட்டு கடனை 20 -30 வருடம் செலுத்துவதில் தான் பெரிய பிரச்சனையே இருக்கிறது. அதிலும் வீட்டுக் கடன் வாங்கிய ஆரம்பக்கட்டத்தில் ஈஎம்ஐ செலுத்துவது பெரும் கஷ்டம், இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே புரியும்.
இந்த நிலையில் புதிதாக வீடு வாங்க திட்டமிடுவோருக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. வாடகை தொடர்ந்து உயர்ந்து வரும் பிரச்சனையால் பலர் சொந்த வீட்டை வாங்கிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கும் வேளையில் இந்த குட் நியூஸ் கட்டாயம் ஆறுதலாக இருக்கும்.

2024 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி தனது பென்ச்மார்க் வட்டி விகிதமான ரெப்போ ரேட்-ஐ 60-80 bps குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், வீடு வாங்குவோரின் நிதி சுமை 2024 ஆம் ஆண்டில் பெரிய அளவில் குறையும் என JLL இன் ஹோம் பர்சேஸ் ஃபோர்டபிலிட்டி இன்டெக்ஸ் (HPAI) அறிக்கை கூறுகிறது.
இதன் மூலம் வீடு வாங்குவோருக்கு பெரிய நிதி சுமை இருக்காது, அதேபோல் ஈஎம்ஐ தொகையும் சமாளிக்க கூடிய வரம்பிற்குள் தான் இருக்கும் எனவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ரெப்போ ரேட் குறைந்தால் கட்டாயம் வங்கிகள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் இதன் மூலம் ஈஎம்ஐ அளவும் தற்போதைய அளவை விடவும் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.
2023 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் பல பிரச்சனைக்கும் மத்தியிலும், சர்வதேச சந்தை மதிப்புக்கு மத்தியிலும் சிறப்பான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆடம்பர பிரிவில் அதிகப்படியான விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இப்படியிருக்கும் வேளையில் 2024 ஆம் ஆண்டில் ரெப்போ ரேட் குறையும் தருவாயில் இந்திய ரியல் எஸ்டேட் துறை நிலையான வளர்ச்சியில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
கடந்த 10 வருடத்தில் 2022 ஆம் ஆண்டில் தான் வீட்டு விலைகள், ஈஎம்ஐ சுமை என அனைத்தும் அதிகரித்து வீடு வாங்குவோர் மத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதே 2022 ஆம் ஆண்டின் மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் ரெப்போ ரேட் 225 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது மறக்க முடியாது.
மேலும் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் கொல்கத்தா தான் மிகவும் மலிவான ரியல் எஸ்டேட் சந்தையாக உள்ளது, இது 2024 ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications