புத்தாண்டு 2025 பிறந்தது. இன்று முதல் நாம் புது வருடத்தில் நுழைந்துள்ளோம். இந்த நேரத்தில் மாதத்தின் முதல் நாளில் பல்வேறு மாற்றங்கள் குறித்து பார்வையிடுவோம். அந்த வகையில், மாதத்தின் முதல் நாள் அதுவும் புத்தாண்டில் ஒரு இனிமையான செய்தி வந்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையை குறைத்துள்ளது.
அந்த வகையில், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து, ரூ.1966-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இந்தியாவில் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 14 கிலோ உள்நாட்டு மற்றும் 19 கிலோ வணிக சிலிண்டர்களின் விலையை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எல்பிஜி சிலிண்டரின் விலை மாறுகிறது. இது சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளை நிர்ணயிக்கிறது. இன்று 2025ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அரசு எண்ணெய் சந்தை நிறுவனங்கள் மீண்டும் சிலிண்டர் விலையை குறைத்துள்ளன. டெல்லியில் இருந்து மும்பைக்கு காஸ் சிலிண்டர் விலை ரூ.14 முதல் 16 வரை குறைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ நகரங்களில் 19KG சிலிண்டர் விலை: டெல்லி: ஜனவரி 1ம் தேதி முதல் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ரூ.1804க்கு கிடைக்கும். டிசம்பர் 1ம் தேதி அதன் விலை ரூ.1818.50 ஆக இருந்தது. அதாவது ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் கடந்த மாதம் டிசம்பர் 1ம் தேதி ரூ.1927.00 ஆக இருந்த எல்பிஜி சிலிண்டரின் விலை தற்போது ரூ.1911 ஆக குறைந்துள்ளது. அதாவது, இங்கு ரூ.16 குறைக்கப்பட்டுள்ளது.
மும்பை: நாட்டின் நிதித் தலைநகர் மும்பையில், எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.15 குறைக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் ரூ.1771 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1756 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை: அதே நேரத்தில் சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் இன்று முதல் ரூ.1966க்கு கிடைக்கும். கடந்த மாதம் டிசம்பரில் இதன் விலை ரூ.1980.50 ஆக இருந்தது. அதாவது சென்னையிலும் சிலிண்டர் விலை ரூ.14.5 குறைக்கப்பட்டுள்ளது.
ஏடிஎஃப் விலையும் குறைப்பு: எண்ணெய் நிறுவனங்கள் ATF விலைகளில் குறைப்பை அறிவித்துள்ளன. இதனால் விமானப் பயணம் மலிவானதாக இருக்கும். ஏடிஎஃப் விலையில் கிலோ லிட்டருக்கு ரூ.11401.37 நிவாரணம் கிடைத்துள்ளது. டிசம்பரில், ஏடிஎஃப் விலை கிலோ லிட்டருக்கு ரூ. 1318.12 உயர்த்தப்பட்டது, அதே நேரத்தில் நவம்பர் மாதத்திலும் கிலோ லிட்டருக்கு ரூ.2,941.5 விலை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications