அமெரிக்காவில் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் பல கோடிப்பேர் இந்தியாவில் இருக்கும் இதே நேரத்தில் அமெரிக்காவில் இருந்தும் பணியாற்ற முடியாமல் பல ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கான விடிவு காலம் தற்போது உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் கிரீன் கார்டுகளுக்காக காத்திருப்பவர்கள், புலம்பெயர்ந்தோர் அல்லாத சில பிரிவினர்கள் உட்பட அந்நாட்டில் வேலை செய்யவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு வொர்க் பர்மீட் வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் இருக்கும் பல ஆயிரம் இந்தியர்களுக்கு பயனளிக்க உள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) துறை வெளியிட்ட அறிவிப்புகள் படி EAD எனப்படும் வேலை செய்ய அங்கீகாரம் அளிக்கும் ஆவணங்களுக்கான உரிமை காலத்தை 5 ஆண்டுகளுக்கு உயர்த்துவதாகக் தெரிவித்துள்ளது. இந்த 5 ஆண்டு காலத்தை புதிதாக EAD வாங்குபவர்களுக்கு மட்டும் அல்லாமல் சில குறிப்பிட்ட வெளிநாட்டவர்கள் ரினிவல்-க்காக விண்ணப்பிக்கும் போது வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
EAD காலத்தை அதன் அதிகப்பட்சமான 5 ஆண்டு காலத்திற்கு உயர்த்துவதன் மூலம் புதிய Forms I-765 விண்ணப்பம் வருவதை பெரிய அளவில் குறைக்க முடியும் என USCIS நம்புகிறது. இதன் மூலம் விண்ணப்பங்களை ப்ராசஸ் செய்யும் நேரம், நிலுவையில் இருக்கும் விண்ணப்பம் ஆகிய அனைத்தும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்கள் அந்நாட்டில் பணியாற்ற அளிக்கப்படும் EAD பொதுவாக 2 வருடம் முதல் 5 வருடம் அளிக்கப்படுகிறது. ஒருவரின் திறன், கல்வி, விசா முறை ஆகியவற்றில் இந்த காலக்கட்டம் தீரமானிக்கப்படுகிறது. இதனால் சராசரியான காலம் 2 -3 வருடமாக மட்டுமே இருக்கும் வேளையில், இதை புதிதாக விண்ணப்பம் செய்வோருக்கும், ரினிவல்-க்காக விண்ணப்பம் செய்வோருக்கும் 5 ஆண்டுகளுக்கு அளிக்க USCIS அமைப்பு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் செய்யப்ட்ட ஆய்வில் அமெரிக்காவில் சுமார் 10.5 லட்சம் பேர் கிரீன் கார்டு வாங்குவதற்காக விண்ணப்பம் செய்து காத்திருக்கின்றனர், தற்போதைய காத்திருப்பு காலத்தை வைத்து பார்க்கும் போது இதில் 4 லட்சம் கிரீன் கார்டு வருவதற்கு முன்பு இறக்க நேரிடும் என தெரிகிறது. இந்த வருடம் மொத்தம் கிரீன் கார்டு நிலுவை விண்ணப்பம் 18 லட்சமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications