வீட்டுக்கடனுக்கு 6 மாத ஈஎம்ஐ தள்ளுபடி.. பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்..!

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட Griha Varishtha scheme என்னும் வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் கடன் வாங்கியவர்களுக்கு 6 ஈஎம்ஐ-யை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உள்ளதாக நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்

பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்

இதன் மூலம் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்கள், மத்திய மாநில அரசு ஊழியர்கள், ரயில்வே, பாதுகாப்புத் துறை, வங்கி போன்ற அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளில் பணியாற்றி வரும் Defined Benefit Pension Scheme கீழ் தகுதி பெற்று இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வீட்டுக் கடனுக்கு 6 மாத ஈஎம்ஐ தள்ளுபடி அளிக்க உள்ளதாக எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் கூறியுள்ளது.

6 ஈஎம்ஐ தள்ளுபடி

6 ஈஎம்ஐ தள்ளுபடி

இத்திட்டத்தில் கடன் வாங்கியவர்களுக்கு அதிகப்படியாக 30 வருடம் கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தகுதியுள்ள நபர்களின் கடனுக்கு 37வது, 38வது, 73வது, 74வது, 121வது, மற்றும் 122வது ஈஎம்ஐ தொகையை நிலுவையில் இருக்கும் அசல் தொகையில் கழிக்கப்படும்.

இதன் மூலம் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வீட்டுக்கடனுக்கான 6 மாதம் ஈஎம்ஐ தள்ளுபடி பெற உள்ளனர்.

 

3,000 கோடி ரூபாய் கடன்

3,000 கோடி ரூபாய் கடன்

Griha Varishtha scheme திட்டத்தின் கீழ் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் சுமார் 15,000 கடன்கள் மூலம் 3,000 கோடி ரூபாய் அளவிலான தொகைக்குக் கடன் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் அதிகப்படியாக 65 வயது வரையில் இருக்கும் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டுக் கடன் அளிக்கப்படும்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் கடன் மூலம் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் புதிதாக வீடுகளைக் கட்டவோ, வாங்கவோ முடியும். இதுமட்டும் அல்லாமல் தற்போது வசித்து வரும் வீட்டை மறுசீரமைப்பு செய்யவோ அல்லது விரிவாக்கம் செய்யவோ கடன் அளிக்கப்படுகிறது.

30 வருட வீட்டுக்கடன்

30 வருட வீட்டுக்கடன்

மேலும் Griha Varishtha scheme திட்டத்தின் கீழ் 65 வயது வரையில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கடன் அளிக்கப்படும் காரணத்தால் அதிகப்படியாக 30 வருடம் அல்லது விண்ணப்பதாரரின் 80 வயது வரையில் கடன் அளிக்கப்படுகிறது.

பல சலுகைகள்

பல சலுகைகள்

தற்போது எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள 6 மாத தள்ளுபடி மூலம் பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அதிகளவிலான லாபத்தைப் பெற்ற உள்ளனர். இதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தில் கடன் வாங்குவோருக்கும் PMAY திட்டத்தின் கீழ் அதிகப்படியாக 2.67 லட்சம் ரூபாய் வரையிலான மானியமும் பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+