இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, மிகப்பெரிய டெலிகாம் சேவை, மிகப்பெரிய ரீடைல் வர்த்தக நெட்வொர்க் என அனைத்தையும் வைத்திருக்கும் மாபெரும் நிறுவனமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது நிறுவன ஊழியர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இந்தியா மீண்டு வரும் நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அறிவிப்பு அனைத்து நிறுவனங்களுக்கும் முக்கிய இலக்காக மாறியுள்ளது.
முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நடப்பு ஆண்டுக்குத் தனது ஊழியர்கள் அனைவருக்கும் சராசரியாக 10 முதல் 12 சதவீதம் வரையிலான சம்பளத்தை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய விஷயமாக மாறியுள்ளது.
சம்பள குறைப்பு
கொரோனா தொற்று மூலம் வர்த்தகம் பாதிக்கப்பட்ட காரணத்தால் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளுக்குச் சம்பளத்தைக் குறைத்தது. இதுமட்டும் அல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும் போனஸ் தொகையைத் தற்காலிகமாக நிறுத்தியது.
புதிய முதலீடுகள்
ஆனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் மிகப்பெரிய அளவிலான முதலீட்டை பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பல முன்னணி முதலீட்டு மற்றும் டெக் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நிலையில், குறைக்கப்பட்ட சம்பளம், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போனஸ் ஆகியவை அனைத்தும் திரும்பவும் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது.
10 - 12 சதவீதம் சம்பள உயர்வு
ஆனால் கடந்த வருடம் ரிலையன்ஸ் நிர்வாகம் தனது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிக்கவில்லை. இதனால் இந்த வருடம் கடந்த வருடத்தின் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகம் சராசரியாகவே 10 முதல் 12 சதவீதம் சம்பள உயர்வை அளிக்க முடிவு செய்துள்ளது.
கார்பரேட் நிறுவனங்கள்
பொதுவாகப் பெரிய கார்பரேட் நிறுவனங்களில் சராசரி சம்பள உயர்வு 5 முதல் 8 சதவீதம் மட்டுமே இருக்கும், ஆனால் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது 10 முதல் 12 சதவீதம் சராசரியாக அளிக்க முடிவு செய்துள்ளது சக இந்திய நிறுவனங்களுக்குப் பெரும் நெருக்கடியாக மாறும் என்பது எவ்விதமான சந்தேகமும் இல்லை. சம்பள உயர்வில் நிறுவனங்கள் மத்தியிலான போட்டி ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தான்.
AON நிறுவனம் ஆய்வு
இந்நிலையில் AON நிறுவனம் இந்திய நிறுவனங்கள் மத்தியில் எடுத்த ஆய்வில் சராசரியாக வருடாந்திர சம்பள உயர்வு இந்த ஆண்டு எப்படி இருக்கும் என ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் வருடாந்திர சம்பள உயர்வின் அளவு 9.3 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் AON நிறுவனம் இந்திய நிறுவனங்கள் மத்தியில் எடுத்த ஆய்வில் சராசரியாக வருடாந்திர சம்பள உயர்வு இந்த ஆண்டி எப்படி இருக்கும் என ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் மத்தியில் வருடாந்திர சம்பள உயர்வின் அளவு 9.3 சதவீதமாக இருந்தது.
கொரோனா பாதிப்பு
இந்த அளவீடு கொரோனா பாதிப்பு நிறைந்த 2021ஆம் நிதியாண்டில் 8.8% ஆகக் குறைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த நிதியாண்டில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் சம்பள உயர்வை அளிக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான செய்தி. இதற்கு நிறுவனங்கள் தரப்பில் வர்த்தகம் மற்றும் வருவாய் குறைந்த காரணத்தால் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வை அளிக்க முடியவில்லை எனக் கூறுகிறது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இதற்கிடையில் பல நிறுவனங்கள் கொரோனா காலத்தில் வர்த்தகம் மற்றும் வருவாய் இழந்த காரணத்தால் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்த காரணத்தால் சம்பளம் உயர்வு இல்லை என்றாலும் ஊழியர்கள் அமைதியாக இருந்தனர். இக்காலகட்டத்தில் பல புதிய நிறுவனங்களுக்கு மாறியதும் நிகழ்ந்தது.
2022ஆம் நிதியாண்டு நிலவரம் என்ன..?
தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து வர்த்தகச் சந்தை மீண்டு வரும் நிலையில், 2022ஆம் நிதியாண்டில் சராசரி சம்பள உயர்வு விகிதம் 9.4% ஆக அதிகரிக்கலாம் என AON ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. இதனால் சம்பளதாரர்கள் நடப்பு ஆண்டில், முந்தைய ஆண்டுகளை விடவும் ஊழியர்கள் அதிகப்படியான சம்பள உயர்வைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications