முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதல் முறையாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் பல முக்கியமான அறிவிப்புகளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திமுகத் தனது தேர்தல் வாக்குறுதியில் மிக முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப்படும் பேறுகால அறிவிப்பை இந்தப் பட்ஜெட் அறிக்கையில் பூர்த்தி செய்துள்ளது.
பேறுகால விடுப்பு
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ள நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில், 2 குழந்தைகளுக்குக் குறைவாக இருக்கும் அரசு பெண் ஊழியர்களுக்குப் பேறுகால விடுப்பு அளவை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக அதிகரிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கால நீட்டிப்பு 1.7.2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டம்
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே உயிரிழந்தால் அளிக்கப்படும் உதவித் தொகை, குடும்பப் பாதுகாப்பு நிதி திட்டத்தின் கீழ் 3 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும்.
குடும்பப் பாதுகாப்பு நிதி கட்டணம்
இதற்காகக் குடும்பப் பாதுகாப்பு நிதி கட்டணம் இனி வரும் காலகட்டத்தில் 110 ரூபாயாக உயர்த்தப்படும். இது குழு காப்பீட்டுத் திட்டத்தில் இருக்கும் அரசு ஊழியர்களுக்குப் பெரிய அளவில் பலன் அளிக்கும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் சம்பளம்
கொரோனா காலத்தில் இந்தியாவில் பல மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளத்தைத் தாமதமாக வழங்கியது. ஆனால் தமிழ்நாடு அரசு எவ்விதமான தாமதமுமின்றிச் சம்பளத்தில் உரிய நேரத்தில் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
அகவிலைப்படி
தமிழ அரசு தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும், ஆயினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (DA) 1.4.2022 முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications