பல லட்சம் ஓய்வூதியதாரர்களுக்குப் பயன்பெறும் வகையில் பென்ஷன் பண்ட் ரெகுலேட்டரி மற்றும் டெவலப்மென்ட் அத்தாரிடி அமைப்பு NPS திட்டத்தில் முதலீட்டு செய்த தொகையை மொத்தமாக வித்டிரா செய்ய அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
தற்போது நேஷனல் பென்ஷன் சிஸ்டம் திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் மட்டுமே வித்டிரா செய்துக்கொள்ள முடியும். இந்த அளவீட்டை மத்திய அரசு 5 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்த ஆலோசனை செய்து வருகிறது.

இதை வித்டிரா செய்வோரின் என்பிஎஸ் கணக்கில் 5 லட்சம் ரூபாய் வரையில் இருப்போருக்கு மட்டுமே இந்தச் சலுகை அளிக்கப்படும்.
இல்லையெனில் தற்போது இருக்கும் நடைமுறையின் படியே மொத்த தொகையில் 60 சதவீத தொகையை மட்டுமே எடுக்க முடியும், மீதமுள்ள 40 சதவீத தொகையை அரசு கையிலிருந்து பென்ஷனாகப் பெற வேண்டும்.
இந்தத் திட்டம் மத்திய அரசு ஆலோசனை செய்து வரும் நிலையில், விரைவில் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா காலத்தில் வேலை இழந்தோர், கொரோனா சிகிச்சைக்காகப் பணம் இல்லாமல் தவிப்போர் அனைவருக்கும் உதவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications