நாட்டில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இந்தியாவில் இருந்து அதன் பணிச்சுமையை மற்ற பகுதிகளுக்கு மாற்றிக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது அதன் வணிக தொடர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள, இப்படி ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுடன் மிக நெருக்கமுடன், அவர்களின் பணிக்கு முன்னுரிமை கொடுத்தும் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனம் நடப்ப நிதியாண்டில் இருமடங்கு வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு வெளியே ஊழியர்கள்
சர்வதேச நிறுவனமான ஹெச்சிஎல்லில் ஏற்கனவே மொத்த ஊழியர்களில் 30% இந்தியாவுக்கு வெளியே உள்ளதாக தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் தடுப்பூசி அளவு மிக அதிகமாக உள்ளது. ஆக அவைகள் கொஞ்சம் கூடுதல் பணிகளை எடுத்து வருகின்றன. வாடிக்கையாளர்களும் எங்களை பற்றி நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என ஹெச்சிஎல்லின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் கட்ட கொரோனா பரவல்
அடுத்த இரண்டு வாரங்களில் நிலைமை சற்று சிறப்பாக இருக்கும் என்று நிறுவனம் நம்புகிறது. கோவிட்-19ன் இரண்டாம் அலைக்கு மத்தியில் நாடு உள்ளது. தினசரி பல ஆயிரம் புதிய வழக்குகளை பதிவு செய்து வருகின்றது. இன்று காலையில் வெளியான அறிக்கையின் படி, 3,49,691 பேர் கொரோனாவால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதே 2,767 பேர் கொரோனாவினால் பலியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரிப்பினைக் கண்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஹெல்ப்லைன் மூலம் உதவி
கடந்த ஆண்டு நிறுவனம் 15 மருத்துவர்கள் மற்றும் 20 செவிலியர்களையும் கொண்ட ஒரு ஹெல்ப்லைனை அமைத்தது. இப்போது அதனை 25 மருத்துவரகளாகவும், 30 செவிலியர்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் நலம் என்பது நாம் கவனம் செலுத்துகின்ற முக்கிய அம்சமாகும். ஹெச்சிஎல் ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நாங்கள் அமைத்துள்ள ஹெல்ப்லைன் மூலம் பல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி திட்டம்
இதோடு தடுப்பூசி திட்டமும் உள்ளது. எங்கள் வளாகங்களில் சில இடங்களில் கேம்ப் அமைத்துள்ளோம். நாங்கள் மெதுவாக அனைத்து இடங்களுக்கும் வருகிறோம். கூடுதலாக ஒரு மருத்துவமனையுடன் இணைந்து தனது இரண்டு வளாகங்களில், ஊழியர்களுக்கு மருத்துவ சேவைகளைப் பெறுவதனை உறுதி செய்துள்ளதாக்வும் தெரிவித்துள்ளார்.
பணியமர்த்தல் திட்டம்
மார்ச் காலாண்டில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையானது 1,68,977 ஆகும். இதன் attrition விகிதம் 9.9% ஆகவும் இருந்தது. இதற்கிடையில் நடப்பு நிதியாண்டில் 20,000 புதியவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு லேட்டரல் பணியமர்த்தல் என்பது அதன் தேவை சூழலைப் பொறுத்தது என்றும், எனினும் முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
சில தினங்களுக்கு தனது நான்காவது காலாண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதன் படி மார்ச் 31வுடன் முடிவடைந்த காலாண்டில் அதன் வருவாய் 5.7% அதிகரித்து 19,642 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிலையான நாணய அடிப்படையில் வருவாய் கடந்த நிதியாண்டில் வருவாய் 1.1% அதிகரித்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டில் இரு இலக்கில் வளர்ச்சி இருக்கும் என்றும் கணித்துள்ளது.
பல புதிய ஒப்பந்தங்கள்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் 3.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெப்பம் இட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 49% அதிகமாகும். இதே கடந்த நிதியாண்டில் 7.3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 18% அதிகமாகும்.
முக்கிய சந்தைகள்
ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற சந்தைகளில் மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதோடு மெக்ஸிகோ மற்றும் பிரேசில் மற்றும் ஸ்பெயின் போன்ற பகுதிகளில் வளர்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நோர்டிக்ஸ் உள்ளிட்ட சந்தைகளில் மிகவும் வலுவாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications