ஐடி ஊழியர்களுக்கு இது செம குட் நியூஸ்.. நிறுவனங்களின் சூப்பர் அறிவிப்பு..!

நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில், பல துறைகளிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வருகின்றது. இதனால் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள், டிஜிட்டல் திறனுள்ள பணியாளர்களை பணியில் அமர்த்தி வருகின்றன.

அதோடு நடப்பு ஆண்டிலும் ஒவ்வொரு நிறுவனமும் தேவைகள் அதிகம் உள்ள நிலையில், கணிசமான அளவு பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளன.

குறிப்பாக டிசிஎஸ் நிறுவனம் 40,000 பேருக்கும் மேற்பட்டோரை கேம்பஸ் மூலம் பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.

ஐடி நிறுவனங்கள் திட்டம்

ஐடி நிறுவனங்கள் திட்டம்

இதே இன்ஃபோசிஸ் நிறுவனமும் நடப்பு ஆண்டில் சுமார் 25,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணி அமர்த்த திட்டமிட்டுள்ளது. விப்ரோ இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் அதிக பணியாளர்களை பணியமர்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஆண்டை காட்டிலும் தேவை அதிகரித்துள்ளது.

மிகப்பெரிய அளவில் தேவை

மிகப்பெரிய அளவில் தேவை

கடந்த ஆண்டை காட்டிலும் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட பரவலானது அதிகரித்து வரும் நிலையில், மேற்கொண்டு பெரும்பாலான துறைகள் ஐடி துறையின் உதவியை நாடலாம். இதனால் ஐடி துறையின் தேவை என்பது நிச்சயம் கணிசமாக அதிகரிக்கும். இதன் காரணமாக நிச்சயம் டிஜிட்டல் திறனுள்ள பணியாளர்களுக்கு தேவை என்பது மிகப்பெரிய அளவில் இருக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி பிரவீன் ராவ் சமீபத்திய அறிக்கையில் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஐடி துறைக்கான தேவை அதிகரிக்கலாம்

ஐடி துறைக்கான தேவை அதிகரிக்கலாம்

டாப் ஐந்து நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் சராசரியாக சுமார் 1,10,000 பேரை பணியில் அமர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 90,000 பேரை பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய நிதியாண்டில் அதிக வேலை வாய்ப்புகள் இருக்கலாம். ஏனெனில் ஐடி துறைக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ஐடி துறைக்கான செலவினங்கள் அதிகரிக்கலாம், பல புதிய ஒப்பந்தங்கள் வரலாம். இதனால் ஐடி ஊழியர்களுக்கான தேவை மிகபெரிய அளவில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

20% மேல் பணியமர்த்தல் அதிகரிக்கும்

20% மேல் பணியமர்த்தல் அதிகரிக்கும்

மேற்கண்ட பல காரணிகளால் கடந்த ஆண்டை காட்டிலும் 20% அதிகமானவர்களை கூடுதலாக பணியமர்த்த வழிவகுக்கும். கடந்த நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம், நான்காவது காலாண்டில் அதன் Attrition rate விகிதம் 7.2% ஆக இருந்ததாக அதிகரித்துள்ளது. இதேபோல இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் Attrition rate விகிதமும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

இன்ஃபோசிஸ் என்ன கூறியது?

இன்ஃபோசிஸ் என்ன கூறியது?

பெங்களுரை தளமாகக் கொண்ட இந்த நிறுவனங்கள் மேற்கொண்டு, திறமைகளை தக்கவைத்துக் கொள்ள மேலும் பணியமர்த்தலை அதிகரிக்கும் என்பதையும் உறுதிபடுத்தியுள்ளன. அதோடு அடுத்த ஒன்று அல்லது இரண்டு காலாண்டுகளுக்கு இந்த நிலை நீடிக்கும் என்றும் இனஃபோசிஸின் ராவ் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டில் கேம்பஸ் மூலம் 21,000 ஊழியர்களை பணியமர்த்திய நிலையில், நடப்பு ஆண்டில் 25,000 பணியாளர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் ராவ் கூறியுள்ளார்.

விப்ரோவின் கருத்து

விப்ரோவின் கருத்து

இதே விப்ரோவின் தலைமை மனிதவள அலுவலர் சவுரப் கோவில், சைபர் செக்யூரிட்டி, ஏஐ மற்றும் டொமைன் நிபுணர்களுக்கான முக்கிய திறன் பகுதிகளுக்கு திறன் அடிப்படையிலான போனஸ் வழங்குவதாகவும் கூறியுள்ளார். அதோடு கடந்த காலாண்டில் நாங்காள் 3,000 பேரை பணியமர்த்தினோம். இது இந்த காலாண்டில் இன்னும் அதிகரிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

DXC Technologyன் திட்டம்

DXC Technologyன் திட்டம்

இதே போல DXC Technology, Mindtree மற்றும் இன்னும் சில ஐடி நிறுவனங்கள் அடுத்த சில காலாண்டுகளில் பணியமர்த்தலை அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். குறிப்பாக DXC Technology நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் Nachiket Sukhtankar நடப்பு நிதியாண்டில் கேம்பஸ் மூலம் 7,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது கடந்த ஆண்டில் 4,500 ஊழியர்கள் வரையில் பணியமர்த்தியதாக கூறியுள்ளார்.

மைண்ட்ரீயின் திட்டம் என்ன?

மைண்ட்ரீயின் திட்டம் என்ன?

இதே மைண்ட்ரீ எத்தனை பேரை பணியமர்த்த போகிறோம் என கூறவில்லை என்றாலும், கடந்த ஆண்டில் 1,600 பேரை பணியமர்த்தியதாக தெரிவித்துள்ளது. அடுத்து வரும் இரண்டு காலாண்டுகளிலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக கேம்பஸ் மற்றும் லேட்டரல் பணியமர்த்தல் மூலம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+