நாட்டின் முன்னணி ஆயில் அன்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் (ONGC), ஜூன் காலாண்டில் அதன் நிகரலாபம் 772.2% அதிகரித்து, 4,335 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் 497 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேவை அதிகரித்திருந்த நிலையில் விலையானது வீழ்ச்சியினை கண்டதே, இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு பேரலுக்கு எவ்வளவு லாபம்?
அதோடு நிறுவனம் உற்பத்தி செய்து விற்ற ஒவ்வொரு பேரலுக்கும் ஜூன் காலாண்டில் 65.59 டாலர்களை பெற்றது. இது கடந்த ஆண்டில் 28.57 டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது இருமடங்கிற்கும் அதிகமாகும்.
இதே போல் கேஸ் விலையும் இந்த ஜூன் காலாண்டில் பிரிட்டிஸ் தெர்மல் யூனிட்டுக்கு 1.79 டாலராக குறைந்து இருந்தது.
உற்பத்தி சரிவு
கச்சா எண்ணெய் உற்பத்தியானது இந்த காலாண்டில் கிட்டதட்ட 5% குறைந்து, 5.4 மில்லியன் டன்னாக குறைந்தது. இதே இயற்கை எரிவாயு உற்பத்தியானது 4.3% குறைந்து, 5.3 பில்லியன் கியூபிக் மீட்டராக இருந்தது.
ஓஎன்ஜிசி-யின் சொந்த கேஸ் உற்பத்தியானது 5.3% குறைந்து, 5.1 பில்லியன் கியூபிக் மீட்டராக குறைந்துள்ளது.
மொத்த வருவாய்
மொத்த வருவாய் விகிதமானது 77% அதிகரித்து 23,022 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 13,011 கோடி ரூபாயாக இருந்தது.
ஓஎன்ஜிசி-யின் முக்கிய வணிகமான ஆய்வு மற்றும் உற்பத்தி மூலம் கிடைத்த லாபம், 6,225.29 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1557.2 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
கொரோனாவினால் பாதிப்பு
ஓஎன்ஜிசி நிறுவனம் கொரோனாவின் காரணமாக தாக்கத்தினை கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எப்படியிருப்பினும் கொரோனா காலத்தில் தேவை குறைந்த நிலையில், எண்ணெய் விலையானது கடந்த ஆண்டில் மோசமான வீழ்ச்சியினை கண்டது. இதன் காரணமாக நிறுவனங்கள் அப்போதே மொத்தமாக வாங்கியிருந்ததும் லாபத்திற்கு உந்துதலாக அமைந்துள்ளது எனலாம்.
ஓஎன்ஜிசி பங்கு விலை
ஓஎன்ஜிசி-யின் பங்கு விலை கடந்த அமர்வில் சற்று குறைந்து 116 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்று சந்தை விடுமுறை ஆதலால் இதன் எதிரொலியானது திங்கட்கிழமையன்று வர்த்தகத்தில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் 52 வார உச்சம் 128.50 ரூபாயாகும். 52 வார குறைந்த விலை 64.10 ரூபாயாகவும் காணப்படுகிறது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications