தமிழ்நாட்டில் 100-ஐ நெருங்கும் டீசல் விலை.. உணவு பொருட்கள் விலை உயரும் பாதிப்பு..!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் இரு முக்கியக் காரணிகளான கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு ஆகியவை இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எவ்விதமான கூடுதல் சுமையை ஏற்படுத்தாத காரணத்தால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை.

இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நுகர்வு பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 2 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான உயர்வும் இல்லாமல் இருப்பது சாமானிய மக்களுக்குப் பெரும் நன்மையாக உள்ளது.

3 நிறுவனங்கள்

3 நிறுவனங்கள்

இந்தியன் ஆயில், பார்த் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் தான் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. 4 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களாக எவ்விதமான மாற்றமும் செய்யவில்லை.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இதற்கு மிக முக்கியக் காரணம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள விலை மாற்றமும், அமெரிக்கச் சந்தையின் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவீட்டில் ஏற்பட்டு உள்ள மாற்றமும் தான்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டு, இந்நாட்டில் எரிபொருள் தேவையைக் குறைத்துள்ளது. இதன் மூலம் மொத்த சந்தையிலும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் பல ஆண்டு உயர்வில் இருந்த கச்சா எண்ணெய் விலை சரிய துவங்கியுள்ளது.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இதேபோல் பிரிட்டன் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள வேளையில் அனைத்து வர்த்தகச் சந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் எரிபொருள் தேவை குறையும் நிலையும் உருவாகியுள்ளது. இதன் வாயிலாகவும் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வு

இன்று சர்வதேச சந்தையில் காலை வர்த்தகத்தில் சரிவில் இருந்த நிலையில் மீண்டும் உயர துவங்கியுள்ளது. இதன் மூலம் நாளையில் இருந்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

WTI, பிரெண்ட் கச்சா எண்ணெய்

WTI, பிரெண்ட் கச்சா எண்ணெய்

இதன் மூலம் தற்போது ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் விலை 0.44 சதவீதம் அதிகரித்து 82.76 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.31 சதவீதம் அதிகரித்து 84.58 டாலராக உயர்ந்துள்ளது.

OPEC

OPEC

இதேபோல் 4 நாட்கள் முன்னதாக OPEC பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 1.26 சதவீதம் அதிகரித்து 83.54 டாலராக உயர்ந்துள்ளது. இதேகாலக்கட்டத்தில் இந்திய பேஸ்கட் கச்சா எண்ணெய் விலை 83.51 டாலராக உள்ளது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இன்று பெட்ரோல், டீசல் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாத காரணத்தால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 103.01 ரூபாயாகவும், டீசல் விலை 98.92 ரூபாயாக உள்ளது. விரைவில் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களைப் போல 100 ரூபாய் அளவீட்டை எட்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+